அன்பாடு திருப்பொதுவில் ஆடுகின்ற அரசேநின் அடிமேல் ஆணை என்பாடென் றிலைஎன்னால் துரும்பும்அசைத் திடமுடியா திதுகால் தொட்டுப் பொன்பாடெவ் விதத்தானும் புரிந்துகொண்டு நீதானே புரத்தல் வேண்டும் உன்பாடு நான்உரைத்தேன் நீஇனிச்சும் மாஇருக்க ஒண்ணா தண்ணா