அன்பாட்டை விழைந்தவரே அணையவா ரீர் அருட்சோதி வடிவினரே அணையவா ரீர் துன்பாட்டை ஒழித்தவரே அணையவா ரீர் துரியநிறை பெரியவரே அணையவா ரீர் பின்பாட்டுக் காலையிதே அணையவா ரீர் பிச்சேற்று கின்றவரே அணையவா ரீர் என்பாட்டை ஏற்றவரே அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர் அணையவா ரீர்