அன்பாலென் தன்னைஇங் காளுடை யாய்இவ் வடியவனேன் நின்பாலென் துன்ப நெறிப்பால் அகற்றென்று நின்றதல்லால் துன்பால் இடரைப் பிறர்பால் அடுத்தொன்று சொன்னதுண்டோ என்பால் இரங்கிலை என்பாற் கடல்பிள்ளைக் கீந்தவனே