அன்பிலேன் எனினும் அறிவிலேன் எனினும் அன்றுவந் தாண்டனை அதனால் துன்பிலேன் எனஇவ் வுலகெலாம் அறியச் சொல்லினேன் சொல்லிய நானே இன்பிலேன் எனஇன் றுரைத்திடல் அழகோ எனைஉல கவமதித் திடில்என் என்பிலே கலந்தாய் நினக்கும்வந் திடுமே எய்துக விரைந்தென திடத்தே கட்டளைக் கலித்துறை