அன்புடன்நின் பதம்புகழாப் பாவி நாவை அறத்துணியேன் நின்அழகை அமர்ந்து காணாத் துன்புறுகண் இரண்டினையும் சூன்றேன் நின்னைத் தொழாக்கையை வாளதனால் துண்ட மாக்கேன் வன்பறநின் தனைவணங்காத் தலையை அந்தோ மடித்திலேன் ஒதியேபோல் வளர்ந்தேன் என்னை இன்பறுவல் எரியிடைவீழ்த் திடினும் அன்றி என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்