அன்புடையாய் அடியேன்நான் அருளருமை அறியேன் அறியாதே மறுத்தபிழை அத்தனையும் பொறுத்து வன்புடையேன் தனைஅழைத்துத் திரும்பவும்என் கரத்தே வலிந்தளித்த பெருங்கருணை வண்ணம்என்றன் மனமும் இன்புடைய கண்களும்விட் டகலாதே இன்னும் விளங்குகின்ற தாயினும்என் வெய்யமனம் உருகா என்புடைய உடலும்இதற் குருகல்அரி தலவே இனித்தநடம் புரிந்துமன்றில் தனித்தசிவக் கொழுந்தே