அன்புற் றடியார் தொழுதேத்த அணியார் மணிப்பொன் அம்பலத்தே வன்புற் றழியாப் பெருங்கருணை மலையார் தலையார் மாலையினார் மன்புற் றரவார் கச்சிடையின் வயங்க நடஞ்செய் வதுகண்டேன் இன்புற் றடியேன் அவர்நடத்தை இன்னும் ஒருகால் காண்பேனோ