அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்