அன்றி னேர்கிலை நம்முடைப் பெருமான் அஞ்செ ழுத்தையும் அடிக்கடி மறந்தாய் ஒன்றி மேற்கதி உறவகை அந்தோ உணர்கி லாய்வயிற் றூண்பொருட் டயலோர் முன்றில் காத்தனை அவ்வள வேனும் முயன்று காத்திலை முன்னவன் கோயில் துன்றி நின்றநல் தொண்டர்தம் தொழும்பு தொடங்கு வானவர் தூயமுன் றிலையே