அன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே அறிந்திருக்கின் றேன்அடியேன் ஆயினும்என் மனந்தான் கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற தரசே கண்ணுடைய கரும்பேஎன் கவலைமனக் கலக்கம் பொன்றிடப்பே ரின்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில் புண்ணியர்கள் உளங்களிப்புப் பொருந்திவிளங் கிடநீ இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின் றெழுந்தருளி அருள்வதெலாம் இனிதருள்க விரைந்தே கலக்குகின்ற - ச மு க பதிப்பு மிசையின் - ச மு க பதிப்பு