அன்றொருநாள் இரவிடைவந் தணிக்கதவந் திறப்பித் தருண்மலர்ச்சே வடிவாயிற் படிப்புறத்தும் அகத்தும் மன்றவைத்துக் கொண்டென்னை வரவழைத்து மகனே வருந்தாதே இங்கிதனை வாங்கிக்கொள் ளென்ன ஒன்றுசிறி யேன்மறுப்ப மறித்தும்வலிந் தெனது ஒருகைதனிற் கொடுத்திங்கே உறைதிஎன்று மறைந்தாய் இன்றதுதான் அனுபவத்துக் கிசைந்ததுநா யடியேன் என்னதவம் புரிந்தேனோ இனித்துயரொன் றிலனே