அப்பணி முடிஎன் அப்பனே மன்றில் ஆனந்த நடம்புரி அரசே இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட் டிந்தநாள் வரையும்என் தனக்கே எப்பணி இட்டாய் அப்பணி அலதென் இச்சையால் புரிந்ததொன் றிலையே செப்புவ தென்நான் செய்தவை எல்லாம் திருவுளம் அறியுமே எந்தாய் அப்பணிசடை - ச மு க பதிப்பு
அப்பணி பொன்முடி அப்பனென் றேத்துமெய் அன்பருக் கன்பரே வாரீர் இன்பம் தரஇங்கு வாரீர் வாரீர்