அப்பனை இப்பனை ஆக்கிச் சிவிகை அமர்ந்தவன்சொல் அப்பனை என்னுயிர்க் கானசெந் தேனை அமுதைஅந்நாள் அப்பனை ஆழி கடத்திக் கரைவிட் டளித்தசடை அப்பனைச் சிற்றம் பலவனை நான்துதித் தாடுவனே