அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே அப்பா மகனேஎன் றார்கின்றான் - துப்பார் சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான் உடையான் உளத்தே உவந்து