அப்பாலுன் சித்தம் அறியேன் எனக்கம்மை அப்பாநின் தாளன்றி யார்கண்டாய் - இப்பாரில் சாதிஉரு வாக்குந் தளைஅவிழ்த்துத் தன்மயமாம் சோதிஉரு வாக்குந் துணை