அமரா வதிஇறைக் காருயிர் ஈந்த அருட்குன்றமே சமரா புரிக்கர சேதணி காசலத் தற்பரனே குமரா பரம குருவே குகாஎனக் கூவிநிற்பேன் எமராஜன் வந்திடுங் கால்ஐய னேஎனை ஏன்றுகொள்ளே