அமைவ றிந்திடா ஆணவப் பயலே அகில கோடியும் ஆட்டுகின் றவன்காண் எமைந டத்துவோன் ஈதுண ராமல் இன்று நாம்பரன் இணையடி தொழுதோம் கமைவின் ஏத்தினோம் அடியரும் ஆனோம் கனிகின் றோம்எனக் கருதிட மயக்கேல் உமையன் ஒற்றியூர்ச் சிவன்அருள் வாளால் உன்னை வெட்டுவல் உண்மைஎன் றுணரே