அம்ப லத்துள்நின் றாடவல் லானே ஆள்இ வர்ந்துவந் தருள்புரி பவனே சம்பு ரங்கர சிவசிவ என்போர் தங்கள் உள்ளகம் சார்ந்திருப் பவனே தும்பை வன்னியம் சடைமுடி யவனே தூய னேபரஞ் சோதியே எங்கள் செம்பொ னேசெழும் பவளமா மலையே கழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே திருச்சிற்றம்பலம் தியாக வண்ணப் பதிகம் திருவொற்றியூர் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்