அம்பரத்தே ஆனந்த வடிவால் என்றும் ஆடுகின்ற மாமணியே அரசே நாயேன் இம்பரத்தம் எனும்உலக நடையில் அந்தோ இடருழந்தேன் பன்னெறியில் எனைஇ ழுத்தே பம்பரத்தின் ஆடியலைப் படுத்தும் இந்தப் பாவிமனம் எனக்குவயப் படுவ தில்லை கொம்பரற்ற இளங்கொடிபோல் தளர்ந்தேன் என்னைக் குறிக்கொள்ளக் கருதுதியோ குறித்தி டாயோ