அம்பலத்தில் ஆடுகின்றார் வெண்ணிலா வே - அவர் ஆடுகின்ற வண்ணமென்ன வெண்ணிலா வே
அம்பலத்தில் எங்கள்ஐயர் ஆடியநல் லாட்டம் அன்பொடுது தித்தவருக் கானதுசொல் லாட்டம் வம்புசொன்ன பேர்களுக்கு வந்ததுமல் லாட்டம் வந்ததலை யாட்டமின்றி வந்ததுபல் லாட்டம்