பாடல் எண் :4209
அம்பலத்தே நடம்புரியும் எனதுதனித் தலைவர்
அன்புடன்என் உளங்கலந்தே அருட்பெருஞ்சோ தியினால்
தம்பலத்தே பெரும்போகந் தந்திடுவார் இதுதான்
சத்தியஞ்சத் தியமதனால் சார்ந்தவர்தாம் இருக்க
எம்பலத்தே மலரணையைப் புனைகஎனப் பலகால்
இயம்புகின்றாள் இவள்அளவில் இசைந்துநும தருளாம்
செம்பலத்தே உறுதருணம் வாய்மலர வேண்டும்
சிற்சபைபொற் சபைஓங்கித் திகழ்பெரிய துரையே
--------------------------------------------------------------------------------
தலைவி வருந்தல்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் எண் :4211
அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
அணிந்திடமுன் சிலசொன்னேன் அதனாலோ அன்றி
எம்பலத்தே எம்மிறைவன் என்னைமணம் புரிவான்
என்றுசொன்னேன் இதனாலோ எதனாலோ அறியேன்
வம்பிசைத்தேன் எனஎனது பாங்கிபகை யானாள்
வளர்த்தெடுத்த தனித்தாயும் மலர்ந்துமுகம் பாராள்
நிம்பமரக் கனியானார் மற்றையர்கள் எல்லாம்
நிபுணர்எங்கள் நடராயர் நினைவைஅறிந் திலனே
பாடல் எண் :5436
அம்பலத்தே ஆடுகின்ற ஆரமுதே அரசே
ஆனந்த மாகடலே அறிவேஎன் அன்பே
உம்பர்கட்கே அன்றிஇந்த உலகர்கட்கும் அருள்வான்
ஒளிர்கின்ற ஒளியேமெய் உணர்ந்தோர்தம் உறவே
எம்பலத்தே வாகிஎனக் கெழுமையும்நற் றுணையாய்
என்உளத்தே விளங்குகின்ற என்இறையே நினது
செம்பதத்தே மலர்விளங்கக் கண்டுகொண்டேன் எனது
சிறுமைஎலாம் தீர்ந்தேமெய்ச் செல்வமடைந் தேனே
பாடல் எண் :5714
அம்பலத்தே திருநடஞ்செய் அடிமலர்என் முடிமேல்
அணிந்துகொண்டேன் அன்பொடும்என் ஆருயிர்க்கும் அணிந்தேன்
எம்பரத்தே மணக்கும்அந்த மலர்மணத்தைத் தோழி
என்உரைப்பேன் உரைக்கஎன்றால் என்னளவன் றதுவே
வம்பிசைத்தேன் அன்றடிநீ என்அருகே இருந்துன்
மணிநாசி அடைப்பதனைத் திறந்துமுகந் தறிகாண்
நம்புறுபார் முதல்நாத வரையுளநாட் டவரும்
நன்குமுகந் தனர்வியந்தார் நன்மணம்ஈ தெனவே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.