அம்பலம் சேர்ந்தேன் எம்பலம் ஆர்ந்தேன் அப்பனைக் கண்டேன் செப்பமுட் கொண்டேன் உம்பர் வியப்ப இம்பர் இருந்தேன் ஓதா துணர்ந்தேன் மீதானம் உற்றேன் நம்பிடில் அணைக்கும் எம்பெரு மானை நாயகன் தன்னைத் தாயவன் தன்னைப் பம்புறப் பாடிப் படிக்கின்றேன் மேலும் படிப்பேன் எனக்குப் படிப்பித்த வாறே