அம்பாதல் நெடுங்கண்ணார்க் கிச்சை கொள்வேன் அகமலர முகமலர்வோ டருள்செய் உன்றன் செம்பாத மலர்ஏத்தேன் இலவு காத்தேன் திருத்தணிகை யேநமது செல்வம் என்றே நம்பாத கொடியேன்நல் லோரைக் கண்டால் நாணிலேன் நடுங்கிலேன் நாயிற் பொல்லேன் ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே