அம்புவி தனிலே தந்தையர் வெறுப்ப அடிக்கடி அயலவர் உடனே வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் வள்ளலே நின்பணி விடுத்தே இம்பர்இவ் வுலகில் ஒருதின மேனும் ஏழையேன் பிறரொடு வெகுண்டே வெம்புறு சண்டை விளைத்ததுண் டேயோ மெய்யநின் ஆணைநான் அறியேன்