அம்மதவேள் கணைஒன்றோ ஐங்கணையும் விடுத்தான் அருள்அடையும் ஆசையினால் ஆருயிர்தான் பொறுத்தாள் இம்மதமோ சிறிதும்இலாள் கலவியிலே எழுந்த ஏகசிவ போகவெள்ளத் திரண்டுபடாள் எனினும் எம்மதமோ எக்குலமோ என்றுநினைப் புளதேல் இவள்மதமும் இவள்குலமும் எல்லாமும் சிவமே சம்மதமோ தேவர்திரு வாய்மலர வேண்டும் சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே