அம்மா லயனுங் காண்பரியீர்க் கமரும் பதிதான் யாதென்றே னிம்மா லுடையா யொற்றுதற்கோ ரெச்ச மதுகண் டறியென்றார் செம்மா லிஃதொன் றென்னென்றேன் றிருவே புரிமேற் சேர்கின்ற வெம்மான் மற்றொன் றென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ
அம்மா வயிற்றெரிக் காற்றேன் எனநின் றழுதலறச் சும்மாஅச் சேய்முகந் தாய்பார்த் திருக்கத் துணிவள்கொலோ இம்மா நிலத்தமு தேற்றாயி னுந்தந் திடுவள்முக்கண் எம்மான்இங் கேழை அழுமுகம் பார்த்தும் இரங்கிலையே