அம்மாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன் அன்பரெலாம் முயன்றுமுயன் றின்படைவான் வருந்தி எம்மானென் றேத்திடவும் அவர்க்கருளான் மருளால் இதுநன்மை இதுதீமை என்றுநினை யாமே மைம்மாலிற் களிசிறந்து வல்வினையே புரியும் வஞ்சகனேன் தனைக்கருதி வந்துமகிழ்ந் தெனக்கும் தம்மான முறவியந்து சம்மான மளித்தான் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே