Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4085
அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் 

ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும் 
இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே 

இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும் 
எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும் 

ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும் 
தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும் 

சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே
பாடல் எண் :5792
அம்மாநான் சொன்மாலை தொடுக்கின்றேன் நீதான் 

ஆர்க்கணிய என்கின்றாய் அறியாயோ தோழி 
இம்மாலை அம்பலத்தே எம்மானுக் கன்றி 

யார்க்கணிவேன் இதைஅணிவார் யாண்டைஉளார் புகல்நீ 
செம்மாப்பில் உரைத்தனைஇச் சிறுமொழிஎன் செவிக்கே 

தீநுழைந்தால் போன்றதுநின் சிந்தையும்நின் நாவும் 
பன்மாலைத் தத்துவத்தால் அன்றிரும்பொன் றாலே 

படைத்ததுனைப் பழக்கத்தால் பொறுத்தனன்என் றறியே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.