அம்மையே என்கோ அப்பனே என்கோ அருட்பெருஞ் சோதியே என்கோ செம்மையே எல்லாம் வல்லசித் தென்கோ திருச்சிற்றம் பலத்தமு தென்கோ தம்மையே உணர்ந்தார் உளத்தொளி என்கோ தமியனேன் தனித்துணை என்கோ இம்மையே அழியாத் திருஉரு அளித்திங் கென்னைஆண் டருளிய நினையே