அயன்தவத் தீன்ற சித்திபுத் திகள்ஆம் அம்மையர் இருவரை மணந்தே இயன்றஅண் டங்கள் வாழ்வுறச் செயும்நின் எழில்மணக் கோலத்தை மறவேன் பயன்தரும் கருணைக் கற்பகத் தருவே பரசிவத் தெழுபரம் பரமே வயன்தரு நிமல நித்தியப் பொருளே வல்லபைக் கணேசமா மணியே