அயன்முதலோர் ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்திட்டாய் உயர்வுறுபேர் அருட்சோதித் திருவமுதம் உவந்தளித்தாய் மயர்வறுநின் அடியவர்தம் சபைநடுவே வைத்தருளிச் செயமுறவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்