அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய் அறிவறிவுள் அறிவாய்ஆங் கதனுள்ளோர் அறிவாய் மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை மன்னும்அறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்த் துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த் துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய் உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்