அயலறியேன் நினதுமலர் அடிஅன்றிச் சிறிதும் அம்பலத்தே நிதம்புரியும் ஆனந்த நடங்கண் டுயலறியேன் எனினும்அது கண்டுகொளும் ஆசை ஒருகடலோ எழுகடலோ உரைக்கவொணா துடையேன் மயலறியா மனத்தமர்ந்த மாமணியே மருந்தே மதிமுடிஎம் பெருமான்நின் வாழ்த்தன்றி மற்றோர் செயலறியேன் எனக்கருளத் திருவுளஞ்செய் திடுவாய் திருஎழுத்தைந் தாணைஒரு துணைசிறிதிங் கிலனே