அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் - ஐயோஎன் அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர் செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து