அரங்கினிற் படைகொண் டுயிர்க்கொலை புரியும் அறக்கடை யவரினுங் கடையேன் இரங்கில்ஓர் சிறிதும் இரக்கம்உற் றறியேன் இயலுறு நாசியுட் கிளைத்த சிரங்கினிற் கொடியேன் சிவநெறி பிடியேன் சிறுநெறிச் சழக்கையே சிலுகுக் குரங்கெனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே