அரசுவரு கின்றதென்றே அறைகின்றேன் நீதான் ஐயமுறேல் உற்றுக்கேள் அசையாது தோழி முரசுசங்கு வீணைமுதல் நாதஒலி மிகவும் முழங்குவது திருமேனி வழங்குதெய்வ மணந்தான் விரசஎங்கும் வீசுவது நாசிஉயிர்த் தறிக வீதிஎலாம் அருட்சோதி விளங்குவது காண்க பரசிஎதிர் கொள்ளுதும்நாம் கற்பூர விளக்குப் பரிந்தெடுத்தென் னுடன்வருக தெரிந்தடுத்து மகிழ்ந்தே