அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா தலமரவும் ஈதென்ன அதிசயமோ மலத்தில் புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம் பொருள்அளிக்கப் பெற்றனன்இப் புதுமைபிறர் அறியா துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை உலகறிய வெளியில்இழுத் தலகில்விருத் தியினால் வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ மனம்ஆலை பாய்வதுகாண் மன்றில் நடத் தரசே