அரிபிரமா தியரெல்லாம் அறிந்தணுக ஒண்ணா அரும்பெருஞ்சீர் அடிமலர்கள் அன்றொருநாள் வருந்தக் கரிஇரவில் நடந்தருளி யானிருக்கு மிடத்தே கதவுதிறப் பித்தெனது கையில்ஒன்று கொடுத்து உரிமையொடு வாழ்கஎன உரைத்ததுவும் அன்றி உவந்தின்றை இரவினும்வந் துணர்த்தினைஎன் மீது பிரியமுனக் கிருந்தவண்ணம் என்புகல்வேன் பொதுவில் பெருநடஞ்செய் அரசேஎன் பிழைபொறுத்த குருவே