அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத் தருட்பெருந் தலத்துமேல் நிலையில் அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில் அருட்பெருந் திருவிலே அமர்ந்த அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே அருட்பெருஞ் சித்திஎன் அமுதே அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே அருட்பெருஞ் சோதிஎன் அரசே