பாடல் எண் :2497
அருட்பெருங் கடலே ஆனந்த நறவே அடிநடு அந்தமுங் கடந்த
தெருட்பெரு மலையே திருஅணா மலையில் திகழ்சுயஞ் சோதியே சிவனே
மருட்பெருங் கடலின் மயங்குகின் றேன்என் மயக்கெலாம் ஒழிந்துவன் பிறவி
இருட்பெருங் கடல்விட் டேறநின் கோயிற் கெளியனேன் வரவரம் அருளே
பாடல் எண் :5306
அருட்பெருங் கடலே என்னை ஆண்டசற் குருவே ஞானப்
பொருட்பெருஞ் சபையில் ஆடும் பூரண வாழ்வே நாயேன்
மருட்பெரு மாயை முற்றும் மடிந்தன வினைக ளோடே
இருட்பெருந் தடையை நீக்கி இரவியும் எழுந்த தன்றே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.