Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3872
அருட்பெருஞ் சோதி அமுதமே அமுதம் 

அளித்தெனை வளர்த்திட அருளாம் 
தெருட்பெருந் தாய்தன் கையிலே கொடுத்த 

தெய்வமே சத்தியச் சிவமே 
இருட்பெரு நிலத்தைக் கடத்திஎன் றனைமேல் 

ஏற்றிய இன்பமே எல்லாப் 
பொருட்பெரு நெறியும் காட்டிய குருவே 

பொதுநடம் புரிகின்ற பொருளே
பாடல் எண் :4335
அருட்பெருஞ் ஸோதிய தாகிய பாதம் 
அம்மையும் அப்பனும் ஆகிய பாதம் 
பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம் 
பொன்வண்ண மாகிய புண்ணிய பாதம்  ஆடிய
பாடல் எண் :4354
அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு 

அம்பல வாணரே வாரீர் 

அன்புடை யாளரே வாரீர்  வாரீர்
பாடல் எண் :4519
அருட்பெருஞ் சோதி மருந்து - என்னை 

ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து 
பொருட்பெரும் போக மருந்து - என்னைப் 

புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து  ஞான
பாடல் எண் :4615
அருட்பெருஞ் ஸோதி அருட்பெருஞ் சோதி 
அருட்பெருஞ் ஸோதி அருட்பெருஞ் ஸோதி 

அருட்சிவ நெறிசார் அருட்பெரு நிலைவாழ் 
அருட்சிவ பதியாம் அருட்பெருஞ் ஸோதி 

ஆகம முடிமேல் ஆரண முடிமேல் 
ஆகநின் றோங்கிய அருட்பெருஞ் ஸோதி 

இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய் 
அகமறப் பொருந்திய அருட்பெருஞ் ஸோதி 

ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய் 
ஆனலின் றோங்கிய அருட்பெருஞ் ஸோதி    
 உரைமனங் கடந்த ஒருபெரு வெளிமேல் 
அரைசுசெய் தோங்கும் அருட்பெருஞ் ஸோதி 

ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும் 
ஆக்கமும் அருளிய அருட்பெருஞ் ஸோதி 

எல்லையில் பிறப்பெனும் எழுகடல் கடத்திஎன் 
அல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஸோதி

இருங்கடல் à®– வடலூரில் சத்திய தருமச்சாலையில்
வழிபாட்டில் உள்ள அடிகள் எழுதியருளிய கையெழுத்துப்படி 

ஏறா நிலைமிசை ஏற்றிஎன் தனக்கே 
ஆறாறு காட்டிய அருட்பெருஞ் ஸோதி 

ஐயமும் திரிபும் அறுத்தென துடம்பினுள் 
ஐயமும் நீக்கிய அருட்பெருஞ் ஸோதி    
 ஒன்றென இரண்டென ஒன்றிரண் டெனஇவை 
அன்றென விளங்கிய அருட்பெருஞ் ஸோதி 

ஓதா துணர்ந்திட ஒளியளித் தெனக்கே 
ஆதாரம் ஆகிய அருட்பெருஞ் ஸோதி 

ஒளவியம் ஆதிஓர் ஆறுந் தவிர்த்தபேர் 
அவ்வியல் வழுத்தும் அருட்பெருஞ் ஸோதி 

திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும்ஓர் 
அருள்வெளிப் பதிவளர் அருட்பெருஞ் ஸோதி 

சுத்தசன் மார்க்க சுகத்தனி வெளிஎனும் 
அத்தகைச் சிற்சபை அருட்பெருஞ் ஸோதி    
 சுத்தமெய்ஞ் ஞான சுகோதய வெளிஎனும் 
அத்து விதச்சபை அருட்பெருஞ் ஸோதி 

தூயக லாந்த சுகந்தரு வெளிஎனும் 
ஆயசிற் சபையில் அருட்பெருஞ் ஸோதி 

ஞானயோ காந்த நடத்திரு வெளிஎனும் 
ஆனியில் சிற்சபை அருட்பெருஞ் ஸோதி 

விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளிஎனும் 
அமலசிற் சபையில் அருட்பெருஞ் ஸோதி 

பெரியநா தாந்தப் பெருநிலை வெளிஎனும் 
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஸோதி    
 சுத்தவே தாந்தத் துரியமேல் வெளிஎனும் 
அத்தகு சிற்சபை அருட்பெருஞ் ஸோதி 

சுத்தசித் தாந்த சுகப்பெரு வெளிஎனும் 
அத்தனிச் சிற்சபை அருட்பெருஞ் ஸோதி 

தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளிஎனும் 
அகர நிலைப்பதி அருட்பெருஞ் ஸோதி 

தத்துவா தீதத் தனிப்பொருள் வெளிஎனும் 
அத்திரு அம்பலத் தருட்பெருஞ் ஸோதி 

சச்சிதா னந்தத் தனிப்பர வெளிஎனும் 
அச்சியல் அம்பலத் தருட்பெருஞ் ஸோதி    
 சாகாக் கலைநிலை தழைத்திடு வெளிஎனும் 
ஆகா யத்தொளிர் அருட்பெருஞ் ஸோதி 

காரண காரியம் காட்டிடு வெளிஎனும் 
ஆரணச் சிற்சபை அருட்பெருஞ் ஸோதி 

ஏகம் அனேகம் எனப்பகர் வெளிஎனும் 
ஆகமச் சிற்சபை அருட்பெருஞ் ஸோதி 

வேதா கமங்களின் விளைவுகட் கெல்லாம் 
ஆதார மாம்சபை அருட்பெருஞ் ஸோதி 

என்றா தியசுடர்க் கியனிலை ஆய்அது()
அன்றாம் திருச்சபை அருட்பெருஞ் ஸோதி    
 () ஆய்அவை - சமுக பதிப்பு   
 சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய்()
அமையும் திருச்சபை அருட்பெருஞ் ஸோதி

() தனிப்பெரு வெளியாய் - சமுக பதிப்பு  
 முச்சுடர் களும்ஒளி முயங்குற அளித்தருள் 
அச்சுட ராம்சபை அருட்பெருஞ் ஸோதி 

துரியமும் கடந்த சுகபூ ரணந்தரும் 
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஸோதி 

எவ்வகைச் சுகங்களும் இனிதுற அளித்தருள் 
அவ்வகைச் சிற்சபை அருட்பெருஞ் ஸோதி 

இயற்கைஉண் மையதாய் இயற்கைஇன் பமுமாம் 
அயர்ப்பிலாச் சிற்சபை அருட்பெருஞ் ஸோதி    
 சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை 
வாக்கிய சிற்சபை அருட்பெருஞ் ஸோதி 

சுட்டுதற் கரிதாம் சுகாதீத வெளிஎனும் 
அட்டமேற் சிற்சபை அருட்பெருஞ் ஸோதி 

நவந்தவிர் நிலைகளும் நண்ணும்ஓர் நிலையாய் 
அவந்தவிர் சிற்சபை அருட்பெருஞ் ஸோதி 

உபயபக் கங்களும் ஒன்றெனக் காட்டிய 
அபயசிற் சபையில் அருட்பெருஞ் ஸோதி 

சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம் 
ஆகர மாம்சபை அருட்பெருஞ் ஸோதி    
 மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்()
அனாதிசிற் சபையில் அருட்பெருஞ் ஸோதி 

() வெளியாய் சமுக பதிப்பு டிச, 
ஓதிநின் றுணர்ந்துணர்ந் துணர்தற் கரிதாம் 
ஆதிசிற் சபையில் அருட்பெருஞ் ஸோதி 

வாரமும் அழியா வரமும் தரும்திரு 
ஆரமு தாம்சபை அருட்பெருஞ் ஸோதி 

இழியாப் பெருநலம் எல்லாம் அளித்தருள் 
அழியாச் சிற்சபை அருட்பெருஞ் ஸோதி 

கற்பம் பலபல கழியினும் அழிவுறா 
அற்புதம் தரும்சபை அருட்பெருஞ் ஸோதி    
 எனைத்தும் துன்பிலா இயல்அளித் தெண்ணிய 
அனைத்தும் தரும்சபை அருட்பெருஞ் ஸோதி 

பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி 
ஆணிப்பொன் னம்பலத் தருட்பெருஞ் ஸோதி 

எம்பலம் எனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி 
அம்பலத் தாடல்செய் அருட்பெருஞ் ஸோதி 

தம்பர ஞான சிதம்பரம் எனுமோர் 
அம்பரத் தோங்கிய அருட்பெருஞ் ஸோதி 

எச்சபை பொதுஎன இயம்பினர் அறிஞர்கள் 
அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ் ஸோதி    
 வாடுதல் நீக்கிய மணிமன் றிடையே 
ஆடுதல் வல்ல அருட்பெருஞ் ஸோதி 

நாடகத் திருச்செயல் நவிற்றிடும் ஒருபேர் 
ஆடகப் பொதுஒளிர் அருட்பெருஞ் ஸோதி 

கற்பனை முழுவதும் கடந்தொளி தரும்ஓர் 
அற்புதச் சிற்சபை அருட்பெருஞ் ஸோதி 

ஈன்றநற் றாயினும் இனிய பெருந்தய 
வான்றசிற் சபையில் அருட்பெருஞ் ஸோதி 

இன்புறு நான்உளத் தெண்ணியாங் கெண்ணியாங் 
கன்புறத் தருசபை அருட்பெருஞ் ஸோதி    
 எம்மையும் என்னைவிட் டிறையும் பிரியா 
தம்மைஅப் பனுமாம் அருட்பெருஞ் ஸோதி 

பிரிவுற் றறியாப் பெரும்பொரு ளாய்என் 
அறிவுக் கறிவாம் அருட்பெருஞ் ஸோதி 

சாதியும் மதமும் சமயமும் காணா 
ஆதிஅ னாதியாம் அருட்பெருஞ் ஸோதி 

தனுகர ணாதிகள் தாங்கடந் தறியும்ஓர் 
அனுபவம் ஆகிய அருட்பெருஞ் ஸோதி 

உனும்உணர் வுணர்வாய் உணர்வெலாம் கடந்த 
அனுபவா தீத அருட்பெருஞ் ஸோதி    
 பொதுவுணர் வுணரும் போதலால் பிரித்தே 
அதுஎனில் தோன்றா அருட்பெருஞ் ஸோதி 

உளவினில் அறிந்தால் ஒழியமற் றளக்கின் 
அளவினில் அளவா அருட்பெருஞ் ஸோதி 

என்னையும் பணிகொண் டிறவா வரமளித் 
தன்னையில் உவந்த அருட்பெருஞ் ஸோதி 

ஓதிஓ தாமல் உறவெனக் களித்த 
ஆதிஈ றில்லா அருட்பெருஞ் ஸோதி 

படிஅடி வான்முடி பற்றினும் தோற்றா 
அடிமுடி எனும்ஓர் அருட்பெருஞ் ஸோதி    
 பவனத் தின் அண்டப் பரப்பின்எங் கெங்கும் 
அவனுக் கவனாம் அருட்பெருஞ் ஸோதி 

திவள்உற்ற அண்டத் திரளின்எங் கெங்கும் 
அவளுக் கவளாம் அருட்பெருஞ் ஸோதி 

மதன்உற்ற அண்ட வரைப்பின்எங் கெங்கும் 
அதனுக் கதுவாம் அருட்பெருஞ் ஸோதி 

எப்பாலு மாய்வெளி எல்லாம் கடந்துமேல் 
அப்பாலும் ஆகிய அருட்பெருஞ் ஸோதி 

வல்லதாய் எல்லாம் ஆகிஎல் லாமும் 
அல்லதாய் விளங்கும் அருட்பெருஞ் சோதி    
 எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய் கண்டோ ர் 
அப்பொருள் ஆகிய அருட்பெருஞ் ஸோதி 

தாங்ககி லாண்ட சராசர நிலைநின் 
றாங்குற விளங்கும் அருட்பெருஞ் ஸோதி 

சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம்புறத் 
தத்திசை விளங்கும் அருட்பெருஞ் ஸோதி 

சத்திகள் எல்லாம் தழைக்கஎங் கெங்கும் 
அத்தகை விளங்கும் அருட்பெருஞ் ஸோதி 

முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும் 
ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ் ஸோதி    
 பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய் 
அரிதினும் அரிதாம் அருட்பெருஞ் ஸோதி 

காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும் 
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ் ஸோதி 

இன்புறு சித்திகள் எல்லாம் புரிகஎன் 
றன்புடன் எனக்கருள் அருட்பெருஞ் ஸோதி 

இறவா வரமளித் தென்னைமேல் ஏற்றிய 
அறவாழி யாம்தனி அருட்பெருஞ் ஸோதி 

நான்அந்தம் இல்லா நலம்பெற எனக்கே 
ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ் ஸோதி    
 எண்ணிய எண்ணியாங் கியற்றுக என்றெனை 
அண்ணிஉள் ஓங்கும் அருட்பெருஞ் ஸோதி 

மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீஅது 
ஆயினை என்றருள் அருட்பெருஞ் ஸோதி 

எண்ணிற் செழுந்தேன் இனியதெள் ளமுதென 
அண்ணித் தினிக்கும் அருட்பெருஞ் ஸோதி 

சிந்தையில் துன்பொழி சிவம்பெறு கெனத்தொழில் 
ஐந்தையும் எனக்கருள் அருட்பெருஞ் ஸோதி 

எங்கெங் கிருந்துயிர் ஏதெது வேண்டினும் 
அங்கங் கிருந்தருள் அருட்பெருஞ் ஸோதி    
 சகமுதல் புறப்புறம் தங்கிய அகப்புறம் 
அகம்புறம் முற்றுமாம் அருட்பெருஞ் ஸோதி 

சிகரமும் வகரமும் சேர்தனி உகரமும் 
அகரமும் ஆகிய அருட்பெருஞ் ஸோதி 

உபரச வேதியின் உபயமும் பரமும் 
அபரமும் ஆகிய அருட்பெருஞ் ஸோதி 

மந்தணம் இதுவென மறுவிலா மதியால் 
அந்தணர் வழுத்தும் அருட்பெருஞ் ஸோதி 

எம்புயக் கனியென எண்ணுவார் இதய 
அம்புயத் தமர்ந்த அருட்பெருஞ் ஸோதி    
 செடியறுத் தேதிட தேகமும் போகமும் 
அடியருக் கேதரும் அருட்பெருஞ் ஸோதி 

துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை 
அன்பருக் கேதரும் அருட்பெருஞ் ஸோதி 

பொதுஅது சிறப்பது புதியது பழயதென் 
றதுஅது வாய்த்திகழ் அருட்பெருஞ் ஸோதி 

சேதனப் பெருநிலை திகழ்தரும் ஒருபரை 
ஆதனத் தோங்கிய அருட்பெருஞ் ஸோதி 

ஓமயத் திருவுரு() உவப்புடன் அளித்தெனக் 
காமயத் தடைதவிர் அருட்பெருஞ் ஸோதி    
 () ஓமயத் திருவுரு à®– பிரணவ உடம்பு
(ஓமயம் - ஓங்காரமயம்)   
 எப்படி எண்ணிய தென்கருத் திங்கெனக் 
கப்படி அருளிய அருட்பெருஞ் ஸோதி 

எத்தகை விழைந்தன என்மனம் இங்கெனக் 
கத்தகை அருளிய அருட்பெருஞ் ஸோதி 

இங்குறத் திரிந்துளம் இளையா வகைஎனக் 
கங்கையில் கனியாம் அருட்பெருஞ் ஸோதி 

பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளிஎன் 
ஆருயிர்க் குள்ஒளிர் அருட்பெருஞ் ஸோதி 

தேவியுற் றொளிர்தரு திருவுரு உடன்என 
தாவியில் கலந்தொளிர் அருட்பெருஞ் ஸோதி    
 எவ்வழி மெய்வழி என்பவே தாகமம் 
அவ்வழி எனக்கருள் அருட்பெருஞ் ஸோதி 

வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள் 
ஐயறி வளித்த அருட்பெருஞ் ஸோதி 

சாமா றனைத்தும் தவிர்த்திங் கெனக்கே 
ஆமா றருளிய அருட்பெருஞ் ஸோதி 

சத்திய மாம்சிவ சத்தியை ஈந்தெனக் 
கத்திறல் வளர்க்கும் அருட்பெருஞ் ஸோதி 

சாவா நிலையிது தந்தனம் உனக்கே 
ஆவா எனஅருள் அருட்பெருஞ் ஸோதி    
 சாதியும் மதமும் சமயமும் பொய்என 
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஸோதி 

மயர்ந்திடேல் சிறிதும் மனந்தளர்ந் தஞ்சேல் 
அயர்ந்திடேல் என்றருள் அருட்பெருஞ் ஸோதி 

தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல் 
ஆசறத் தெரித்த அருட்பெருஞ் ஸோதி 

காட்டிய உலகெலாம் கருணையால் சித்தியின் 
ஆட்டியல் புரியும் அருட்பெருஞ் ஸோதி 

எங்குலம் எம்மினம் என்பதொண் ணூற்றா 
றங்குலம் என்றருள் அருட்பெருஞ் ஸோதி    
 எம்மதம் எம்இறை என்ப உயிர்த்திரள் 
அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஸோதி 

கூறிய கருநிலை குலவிய கீழ்மேல் 
ஆறியல் எனஉரை அருட்பெருஞ் ஸோதி 

எண்தர முடியா திலங்கிய பற்பல 
அண்டமும் நிறைந்தொளிர் அருட்பெருஞ் ஸோதி 

சாருயிர்க் கெல்லாம் தாரக மாம்பரை 
ஆருயிர்க் குயிராம் அருட்பெருஞ் ஸோதி 

வாழிநீ டூழி வாழிஎன் றோங்குபேர் 
ஆழியை அளித்த அருட்பெருஞ் ஸோதி    
 மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை 
ஆய்ந்திடென் றுரைத்த அருட்பெருஞ் ஸோதி 

எச்சம் நினக்கிலை எல்லாம் பெருகஎன் 
றச்சம் தவிர்த்தஎன் அருட்பெருஞ் ஸோதி 

நீடுக நீயே நீள்உல கனைத்தும்நின் 
றாடுக என்றஎன் அருட்பெருஞ் ஸோதி 

முத்திறல் வடிவமும்() முன்னியாங் கெய்துறும் 
அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ் ஸோதி 

() முத்திறல் வடிவம் à®– மூன்று வகை உடம்புகள்
சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம்  
 மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும் 
ஆவகை எனக்கருள் அருட்பெருஞ் ஸோதி    
 கருமசித் திகளின் கலைபல கோடியும் 
அரசுற எனக்கருள் அருட்பெருஞ் ஸோதி 

யோகசித் திகள்வகை உறுபல கோடியும் 
ஆகஎன் றெனக்கருள் அருட்பெருஞ் ஸோதி 

ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும் 
ஆனியின் றெனக்கருள் அருட்பெருஞ் ஸோதி 

புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை 
அடைவதென் றருளிய அருட்பெருஞ் ஸோதி 

முத்திஎன் பதுநிலை முன்னுறு சாதனம் 
அத்தக வென்றஎன் அருட்பெருஞ் ஸோதி    
 சித்திஎன் பதுநிலை சேர்ந்த அனுபவம் 
அத்திறம் என்றஎன் அருட்பெருஞ் ஸோதி 

ஏகசிற் சித்தியே இயல்உற அனேகம் 
ஆகிய தென்றஎன் அருட்பெருஞ் ஸோதி 

இன்பசித் தியின்இயல் ஏகம்அ னேகம் 
அன்பருக் கென்றஎன் அருட்பெருஞ் ஸோதி 

எட்டிரண் டென்பன இயலும்முற் படிஎன 
அட்டநின் றருளிய அருட்பெருஞ் ஸோதி 

இப்படி கண்டனை இனிஉறு படிஎலாம் 
அப்படி யேஎனும் அருட்பெருஞ் ஸோதி    
 படிமுடி கடந்தனை பார்இது பார்என 
அடிமுடி காட்டிய அருட்பெருஞ் ஸோதி 

சோதியுட் சோதியின் சொருபமே அந்தம்
ஆதியென் றருளிய அருட்பெருஞ் ஸோதி 

இந்தசிற் ஸோதியின் இயல்உரு ஆதி 
அந்தமென் றருளிய அருட்பெருஞ் ஸோதி 

ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே 
ஆதியென் றருளிய அருட்பெருஞ் ஸோதி 

நல்அமு தென்ஒரு நாஉளம் காட்டிஎன் 
அல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஸோதி    
 கற்பகம் என்னுளங் கைதனில் கொடுத்தே 
அற்புதம் இயற்றெனும் அருட்பெருஞ் ஸோதி 

கதிர்நலம் என்இரு கண்களிற் கொடுத்தே 
அதிசயம் இயற்றெனும் அருட்பெருஞ் ஸோதி 

அருள்ஒளி என்தனி அறிவினில் விரித்தே 
அருள்நெறி விளக்கெனும் அருட்பெருஞ் ஸோதி 

பரைஒளி என்மனப் பதியினில் விரித்தே 
அரசது இயற்றெனும் அருட்பெருஞ் ஸோதி 

வல்லப சத்திகள் வகைஎலாம் அளித்தென 
தல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஸோதி    
 ஆரியல் அகம்புறம் அகப்புறம் புறப்புறம் 
ஆரமு தெனக்கருள் அருட்பெருஞ் ஸோதி 

சூரிய சந்திர ஸோதியுட் ஸோதிஎன் 
றாரியர் புகழ்தரும் அருட்பெருஞ் ஸோதி 

பிறிவே தினிஉனைப் பிடித்தனம் உனக்குநம் 
அறிவே வடிவெனும் அருட்பெருஞ் ஸோதி 

எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும் 
அஞ்சேல் என்றருள் அருட்பெருஞ் ஸோதி 

மாண்டுழ லாவகை வந்திளங் காலையே 
ஆண்டுகொண் டருளிய அருட்பெருஞ் ஸோதி    
 பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்தென 
தற்றமும் நீக்கிய அருட்பெருஞ் ஸோதி 

சமயம் குலமுதல் சார்பெலாம் விடுத்த 
அமயந் தோன்றிய அருட்பெருஞ் ஸோதி 

வாய்தற் குரித்தெனும் மறைஆ கமங்களால் 
ஆய்தற் கரிய அருட்பெருஞ் ஸோதி 

எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை 
அல்லா திலைஎனும் அருட்பெருஞ் ஸோதி 

நவையிலா உளத்தில் நாடிய நாடிய 
அவைஎலாம் அளிக்கும் அருட்பெருஞ் ஸோதி    
 கூற்றுதைத் தென்பால் குற்றமும் குணங்கொண் 
டாற்றல்மிக் களித்த அருட்பெருஞ் ஸோதி 

நன்றறி வறியா நாயினேன் தனையும் 
அன்றுவந் தாண்ட அருட்பெருஞ் ஸோதி 

நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன் 
ஆயினும் அருளிய அருட்பெருஞ் ஸோதி 

தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன் 
ஆத்திரம் அளித்த அருட்பெருஞ் ஸோதி 

எச்சோ தனைகளும் இயற்றா தெனக்கே 
அச்சோ என்றருள் அருட்பெருஞ் ஸோதி    
 ஏறா நிலைநடு ஏற்றிஎன் றனைஈண் 
டாறாறு கடத்திய அருட்பெருஞ் ஸோதி 

தாபத் துயரம் தவிர்த்துல குறும்எலா 
ஆபத்தும் நீக்கிய அருட்பெருஞ் ஸோதி 

மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே 
அருட்குரு வாகிய அருட்பெருஞ் ஸோதி 

உருவமும் அருவமும் உபயமும் ஆகிய 
அருள்நிலை தெரித்த அருட்பெருஞ் ஸோதி 

இருள்அறுத் தென்உளத் தெண்ணியாங் கருளி 
அருளமு தளித்த அருட்பெருஞ் ஸோதி    
 தெருள்நிலை இதுவெனத் தெருட்டிஎன் உளத்திருந் 
தருள்நிலை காட்டிய அருட்பெருஞ் ஸோதி 

பொருட்பதம் எல்லாம் புரிந்துமேல் ஓங்கிய 
அருட்பதம் அளித்த அருட்பெருஞ் ஸோதி 

உருள்சக டாகிய உளஞ்சலி யாவகை 
அருள்வழி நிறுத்திய அருட்பெருஞ் ஸோதி 

வெருள்மன மாயை வினைஇருள் நீக்கிஉள் 
அருள்விளக் கேற்றிய அருட்பெருஞ் ஸோதி 

சுருள்விரி வுடைமனச் சுழல்எலாம் அறுத்தே 
அருள்ஒளி நிரப்பிய அருட்பெருஞ் ஸோதி    
 விருப்போ டிகல்உறு வெறுப்பும் தவிர்த்தே 
அருட்பே றளித்த அருட்பெருஞ் ஸோதி 

அருட்பேர் தரித்துல கனைத்தும் மலர்ந்திட 
அருட்சீர் அளித்த அருட்பெருஞ் ஸோதி 

உலகெலாம் பரவஎன் உள்ளத் திருந்தே 
அலகிலா ஒளிசெய் அருட்பெருஞ் ஸோதி 

விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய் 
அண்ணி நிறைந்த அருட்பெருஞ் ஸோதி 

விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய் 
அண்ணி வயங்கும் அருட்பெருஞ் ஸோதி    
 காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய் 
ஆற்றலின் ஓங்கும்() அருட்பெருஞ் ஸோதி

() ஓங்கிய - சமுக பதிப்பு 

காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய் 
ஆற்ற விளங்கும் அருட்பெருஞ் ஸோதி 

அனலினுள் அனலாய் அனல்நடு அனலாய் 
அனலுற விளங்கும் அருட்பெருஞ் ஸோதி 

அனலுறும் அனலாய் அனல்நிலை அனலாய் 
அனலுற வயங்கும் அருட்பெருஞ் ஸோதி 

புனலினுள் புனலாய்ப் புனலிடைப் புனலாய் 
அனைஎன வயங்கும் அருட்பெருஞ் ஸோதி    
 புனலுறு புனலாய்ப் புனல்நிலைப் புனலாய் 
அனைஎனப் பெருகும் அருட்பெஞ் ஸோதி 

புவியினுள் புவியாய்ப் புவிநடுப் புவியாய் 
அவைதர வயங்கும் அருட்பெருஞ் ஸோதி 

புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய் 
அவைகொள விரிந்த அருட்பெருஞ் ஸோதி 

விண்ணிலை சிவத்தின் வியனிலை அளவி 
அண்ணுற அமைந்த அருட்பெருஞ் ஸோதி 

வளிநிலைச் சத்தியின் வளர்நிலை அளவி 
அளிஉற அமைத்த அருட்பெருஞ் ஸோதி    
 நெருப்பது நிலைநடு நிலைஎலாம் அளவி 
அருப்பிட வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

நீர்நிலை திரைவளர் நிலைதனை அளவி 
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

புவிநிலைச் சுத்தமாம் பொற்பதி அளவி 
அவையுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

மண்ணினில் திண்மையை வகுத்ததிற் கிடக்கை 
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

மண்ணினில் பொன்மை வகுத்ததில் ஐம்மையை 
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 மண்ணினில் ஐம்பூ வகுத்ததில் ஐந்திறம் 
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

மண்ணினில் நாற்றம் வகுத்ததில்() பல்வகை 
அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஸோதி 

() வகுத்தது - சாலையில் உள்ள அடிகள் கையெழுத்துப் படி

மண்ணினில் பற்பல வகைகரு நிலஇயல் 
அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஸோதி 

மண்ணினில் ஐந்தியல் வகுத்ததில் பல்பயன் 
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

மண்ணிடை அடிநிலை வகுத்ததில் பல்நிலை 
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி    
 மண்ணில்ஐந் தைந்து வகையும் கலந்துகொண் 
டண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஸோதி 

மண்ணியல் சத்திகள் மண்செயல் சத்திகள் 
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள் 
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

மண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள் 
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

மண்கணச் சத்திகள் வகைபல பலவும் 
அண்கொள அமைத்த அருட்பெருஞ் ஸோதி    
 மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும் 
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

மண்கரு உயிர்த்தொகை வகைவிரி பலவா 
அண்கொள அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

மண்ணினிற் பொருள்பல வகைவிரி வௌ;வே 
றண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஸோதி 

மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல 
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்() 
அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஸோதி 

() ஆ பா பதிப்பைத் தவிர ஏனைய பதிப்புகள் அனைத்திலும், 
சாலையிலுள்ள அடிகள் கையெழுத்துப் படியிலும் ,  ஆம் அடிகள் 
,  ஆக உள்ளன ஆபா பதிப்பில் மட்டும் இப்பதிப்பில் 
உள்ளவாறு காணப்படுகிறது   
 மண்ணிடைப் பக்குவம் வகுத்ததில் பயன்பல 
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

நீரினில் தண்மையும் நிகழ்ஊ றொழுக்கமும் 
ஆருற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

நீரினிற் பசுமையை நிறுத்தி அதிற்பல 
ஆருற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

நீரிடைப் பூவியல் நிகழ்உறு திறஇயல் 
ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

நீரினில் சுவைநிலை நிரைத்ததில் பல்வகை 
ஆருறப் புரிந்த அருட்பெருஞ் ஸோதி    
 நீரினில் கருநிலை நிகழ்த்திய பற்பல 
ஆருற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

நீரிடை நான்கியல் நிலவுவித் ததிற்பல 
ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

நீரிடை அடிநடு நிலைஉற வகுத்தனல் 
ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஸோதி 

நீரிடை ஒளிஇயல் நிகழ்பல குணஇயல் 
ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல 
ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 நீரினில் சத்தர்கள் நிறைவகை உறைவகை 
ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஸோதி 

நீரிடை உயிர்பல நிகழ்உறு பொருள்பல 
ஆருற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

நீரிடை நிலைபல நிலைஉறு செயல்பல 
ஆர்கொள வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

நீர்உறு பக்குவ நிறைவுறு பயன்பல 
ஆருற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

நீர்இயல் பலபல நிறைத்ததிற் பிறவும் 
ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஸோதி    
 
தீயினில் சூட்டியல் சேர்தரச்() செலவியல் 
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

() சேர்பரச் - ஆசபாபதி சிவாசாரியார் அகவல் பதிப்பு, பி இரா பதிப்பு 
தீயினில் வெண்மைத் திகழ்இயல் பலவாய் 
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

தீயிடைப் பூஎலாம் திகழுறு திறம்எலாம் 
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

தீயிடை ஒளியே திகழுற அமைத்ததில் 
ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

தீயிடை அருநிலை திருநிலை கருநிலை 
ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி    
 தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல 
ஆய்வகை அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை 
ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

தீயிடைப் பெருந்திறல் சித்திகள் பலபல 
ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

தீயிடைச் சித்துகள் செப்புறும் அனைத்தும் 
ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள் 
ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 தீயிடை உயிர்பல திகழுறு பொருள்பல 
ஆய்வகை அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன் 
ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

தீயினிற் பக்குவஞ் சேர்குணம் இயற்குணம் 
ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

தீயிடை உருக்கியல் சிறப்பியல் பொதுவியல் 
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

தீயியல் பலபல செறித்ததில் பலவும் 
ஆயுறப் புரிந்த அருட்பெருஞ் ஸோதி    
 காற்றிடை அசைஇயல் கலைஇயல் உயிரியல் 
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

காற்றிடைப் பூவியல் கருதுறு திறஇயல் 
ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

காற்றினில் ஊறியல் காட்டுறு பலபல 
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

காற்றினில் பெருநிலை கருநிலை அளவில 
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

காற்றிடை ஈரியல் காட்டி அதிற்பல 
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 காற்றினில் இடைநடு கடைநடு அகப்புறம் 
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

காற்றினில் குணம்பல கணம்பல வணம்பல 
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

காற்றிடைச் சத்திகள் கணக்கில உலப்பில 
ஆற்றவும் அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன 
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

காற்றிடை உயிர்பல கதிபல கலைபல 
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஸோதி    
 காற்றிடை நானிலைக் கருவிகள் அனைத்தையும் 
ஆற்றுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

காற்றிடை உணரியல் கருதியல் ஆதிய 
ஆற்றுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

காற்றிடைச் செயல்எலாம் கருதிய பயன்எலாம் 
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

காற்றினில் பக்குவக் கதிஎலாம் விளைவித் 
தாற்றலின் வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

காற்றினில் காலம் கருதுறு வகைஎலாம் 
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும் 
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

வெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல் 
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

வெளியிடைப் பூஎலாம் வியப்புறு திறன்எலாம் 
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

வெளியினில் ஒலிநிறை வியனிலை அனைத்தும் 
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

வெளியிடைக் கருநிலை விரிநிலை அருநிலை 
அளிகொள வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே 
அளிபெற விளக்கும் அருட்பெருஞ் ஸோதி 

வெளியினில் சத்திகள் வியப்புறு() சத்தர்கள் 
அளியுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

() வியப்புற - சாலையிலுள்ள அடிகள் கையெழுத்துப் படி

வெளியிடை ஒன்றே விரித்ததில் பற்பல 
அளிதர வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

வெளியிடை பலவே விரித்ததில் பற்பல 
அளிதர அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

வெளியிடை உயிரியல் வித்தியல் சித்தியல் 
அளிபெற அமைத்த அருட்பெருஞ் ஸோதி    
 வெளியின் அனைத்தையும் விரித்ததில் பிறவும் 
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

புறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல் 
அறமுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை 
அறம்பெற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

அகப்புற நடுக்கடை அணைவால் புறமுதல் 
அகப்பட வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

அகப்புற நடுமுதல் அணைவால் புறக்கடை 
அகப்பட அமைத்த அருட்பெருஞ் ஸோதி    
 கருதக நடுவொடு கடைஅணைந் தகமுதல் 
அருளுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

தணிஅக நடுவொடு தலைஅணைந் தகக்கடை 
அணியுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

அகநடு புறக்கடை அணைந்தகப் புறமுதல் 
அகமுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

அகநடு புறத்தலை அணைந்தகப் புறக்கடை 
அகலிடை வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

அகநடு அதனால் அகப்புற நடுவை 
அகமற வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 அகப்புற நடுவால் அணிபுற நடுவை 
அகப்பட அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

புறநடு அதனால் புறப்புற நடுவை 
அறமுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

புகலரும் அகண்ட பூரண நடுவால் 
அகநடு வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

புறப்புறக் கடைமுதல் புணர்ப்பால் புறப்புறம் 
அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

புறத்தியல் கடைமுதல் புணர்ப்பால் புறத்துறும் 
அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 அகப்புறக் கடைமுதல் அணைவால் அக்கணம்() 
அகத்துற வகுத்த அருட்பெருஞ் ஸோதி

() அகக்கணம் - சமுக பதிப்பு 

அகக்கடை முதல்புணர்ப் பதனால் அகக்கணம் 
அகத்திடை வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும் 
ஆனற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும் 
அருப்பிட வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மேல் உயிர்ப்பும் 
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 புனல்மேல் புவியும் புவிமேல் புடைப்பும் 
அனல்மேல் வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

பகுதிவான் வெளியில் படர்ந்தமா பூத 
அகல்வெளி வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

உயிர்வெளி இடையே உரைக்கரும் பகுதி 
அயவெளி வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

உயிர்வெளி அதனை உணர்கலை வெளியில் 
அயலற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

கலைவெளி அதனைக் கலப்பறு சுத்த 
அலர்வெளி வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி 
அத்திடை வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

பரவெளி அதனைப் பரம்பர வெளியில் 
அரசுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

பரம்பர வெளியைப் பராபர வெளியில் 
அரந்தெற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

பராபர வெளியைப் பகர்பெரு வெளியில் 
அராவற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

பெருவெளி அதனைப் பெருஞ்சுக வெளியில் 
அருளுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 குணமுதல் கருவிகள் கூடிய பகுதியில் 
அணைவுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

மனமுதல் கருவிகள் மன்னுயிர் வெளியிடை 
அனமுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

காலமே முதலிய கருவிகள் கலைவெளி 
ஆலுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை 
அரசுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

இவ்வெளி எல்லாம் இலங்கஅண் டங்கள் 
அவ்வயின் அமைத்த அருட்பெருஞ் ஸோதி    
 ஓங்கிய அண்டம் ஒளிபெற முச்சுடர் 
ஆங்கிடை வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

சிருட்டித் தலைவரைச் சிருட்டிஅண் டங்களை 
அருட்டிறல் வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

காவல்செய் தலைவரைக் காவல்அண் டங்களை 
ஆவகை அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

அழித்தல்செய் தலைவரை அவரண் டங்களை 
அழுக்கற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

மறைத்திடு தலைவரை மற்றும்அண் டங்களை 
அறத்தொடு வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 தெளிவுசெய் தலைவரைத் திகழும்அண் டங்களை 
அளிபெற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

விந்துவாம் சத்தியை விந்தின்அண் டங்களை 
அந்திறல் வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

ஓங்கார சத்திகள் உற்றஅண் டங்களை 
ஆங்காக வமைத்த() அருட்பெருஞ் ஸோதி 

() ஆங்காங் கமைத்த - முதற் பதிப்பு, பொசு, பி இரா, சமுக 

சத்தத் தலைவரைச் சாற்றும்அண் டங்களை 
அத்தகை வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

நாதமாம் பிரமமும் நாதஅண் டங்களை 
ஆதரம் வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 பகர்பரா சத்தியைப் பதியும்அண் டங்களும் 
அகமற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை 
அரசுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

எண்ணில்பல் சத்தியை எண்ணில்அண் டங்களை 
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

அளவில்பல் சத்தரை அளவில் அண்டங்களை 
அளவற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

உயிர்வகை அண்டம் உலப்பில எண்ணில 
அயர்வற வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 களவில கடல்வகை கங்கில கரைஇல 
அளவில வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

கடலவை அனைத்தும் கரைஇன்றி நிலையுற 
அடல்அனல் அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

கடல்களும் மலைகளும் கதிகளும் நதிகளும் 
அடலுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

கடலிடைப் பல்வளம் கணித்ததில் பல்உயிர் 
அடலுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

மலையிடைப் பல்வளம் வகுத்ததில் பல்லுயிர் 
அலைவற வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 ஒன்றினில் ஒன்றே ஒன்றிடை ஆயிரம் 
அன்றற வகுத்த அருட்பெஞ் ஸோதி 

பத்திடை ஆயிரம் பகரதில் கோடி 
அத்துற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

நூற்றிடை இலக்கம் நுவலதில் அனந்தம் 
ஆற்றிடை வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

கோடியில் அனந்த கோடிபல் கோடி 
ஆடுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

வித்தியல் ஒன்றாய் விளைவியல் பலவாய் 
அத்தகை அமைத்த அருட்பெருஞ் ஸோதி    
 விளைவியல் அனைத்தும் வித்திடை அடங்க 
அளவுசெய் தமைத்த அருட்பெருஞ் ஸோதி 

வித்தும் பதமும் விளையுப கரிப்பும் 
அத்திறல் அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

வித்திடை முளையும் முளையிடை விளைவும் 
அத்தக அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும் 
அத்திறம் வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும் 
அளையுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி   
 முளையதின் முளையும் முளையினுள் முளையும் 
அளைதர அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும் 
அத்துற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

பதமதிற் பதமும் பதத்தினுள் பதமும் 
அதிர்வற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும் 
அற்றென வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

பொருள்நிலை உறுப்பியல் பொதுவகை முதலிய 
அருளுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 உறவினில் உறவும் உறவினில் பகையும் 
அறனுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

பகையினில் பகையும் பகையினில் உறவும் 
அகைவுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

பாதியும் முழுதும் பதிசெயும் அந்தமும் 
ஆதியும் வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

துணையும் நிமித்தமும் துலங்கதின் அதுவும் 
அணைவுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

உருவதின் உருவும் உருவினுள் உருவும் 
அருளுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி    
 அருவினுள் அருவும் அருவதில் அருவும் 
அருளியல் அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

கரணமும் இடமும் கலைமுதல் அணையுமோர் 
அரணிலை வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

உருவதில் அருவும் அருவதில் உருவும் 
அருளுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி()

() சமுக பதிப்பில் இவ்விரண்டடிகள் முன்னும்,
மேல் இரண்டடிகள் பின்னுமாக உள்ளன

வண்ணமும் வடிவும் மயங்கிய வகைபல 
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

சிறுமையில் சிறுமையும் சிறுமையில் பெருமையும் 
அறிதர வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும் 
அருணிலை வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

திண்மையில் திண்மையும் திண்மையில் நேர்மையும் 
அண்மையின் வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

மென்மையில் மென்மையும் மென்மையில் வன்மையும் 
அன்மையற் றமைத்த அருட்பெருஞ் ஸோதி 

அடியினுள் அடியும் அடியிடை அடியும் 
அடியுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

நடுவினுள் நடுவும் நடுவதில் நடுவும் 
அடர்வுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி    
 முடியினுள் முடியும் முடியினில் முடியும் 
அடர்தர அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

அகப்பூ அகவுறுப் பாக்க அதற்கவை 
அகத்தே வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

புறப்பூ புறத்தில் புனையுரு வாக்கிட 
அறத்துடன் வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

அகப்புறப் பூஅகப் புறவுறுப் பியற்றிட 
அகத்திடை வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

புறப்புறப் பூவதில் புறப்புற உறுப்புற 
அறத்திடை வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில் 
ஆருயிர் அமைக்கும் அருட்பெருஞ் ஸோதி 

ஊர்வன பறப்பன உறுவன நடப்பன 
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

அசைவில அசைவுள ஆருயிர்த் திரள்பல 
அசலற( )வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

() அசைவற à®– முதற் பதிப்பு, பொசு, பி இரா, சமுக

அறிவொரு வகைமுதல் ஐவகை அறுவகை 
அறிதர வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

வௌ;வே றியலொடு வௌ;வேறு பயன்உற 
அவ்வா றமைத்த அருட்பெருஞ் ஸோதி    
 சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல 
அத்தகை வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும் 
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

பெண்ணினுள் மூன்றும் ஆணினுள் இரண்டும் 
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும் 
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

பெண்ணியல் ஆணும் ஆணியல் பெண்ணும் 
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஸோதி    
 பெண்திறல் புறத்தும் ஆண்திறல் அகத்தும் 
அண்டுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

பெண்ணியல் மனமும் ஆணியல் அறிவும் 
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

தனித்தனி வடிவினும் தக்கஆண் பெண்இயல் 
அனைத்துற வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

உனற்கரும் உயிருள உடலுள உலகுள 
அனைத்தையும் வகுத்த அருட்பெருஞ் ஸோதி 

ஓவுறா எழுவகை உயிர்முதல் அனைத்தும் 
ஆவகை வகுத்த அருட்பெருஞ் ஸோதி    
 பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில் 
ஐபெற அமைத்த அருட்பெருஞ் ஸோதி 

தாய்கருப் பையினுள் தங்கிய உயிர்களை 
ஆய்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

முட்டைவாய்ப் பயிலும் முழுஉயிர்த் திரள்களை 
அட்டமே காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

நிலம்பெறும் உயிர்வகை நீள்குழு அனைத்தும் 
அலம்பெறக் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

வேர்வுற உதித்த மிகும்உயிர்த் திரள்களை 
ஆர்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி    
 உடலுறு பிணியால் உயிருடல் கெடாவகை 
அடலுறக் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

சிசுமுதல் பருவச் செயல்களின் உயிர்களை 
அசைவறக் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

உயிருறும் உடலையும் உடலுறும் உயிரையும் 
அயர்வறக் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை 
ஆடுறக் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

முச்சுட ராதியால் எச்சக உயிரையும் 
அச்சறக் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி   
 வான்முகில் சத்தியால் மழைபொழி வித்துயிர் 
ஆனறக் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

இன்புறு சத்தியால் எழில்மழை பொழிவித் 
தன்புறக் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

எண்இயல் சத்தியால் எல்லா உலகினும் 
அண்ணுயிர் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

அண்டப் புறப்புற அமுதம் பொழிந்துயிர் 
அண்டுறக் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

தேவரை எல்லாம் திகழ்புற() அமுதளித் 
தாவகை காத்தருள் அருட்பெருஞ் ஸோதி    
 () திகழ்வுற à®– முதற்பதிப்பு, பொசு, பிஇரா, ஆபா  
 அகப்புற அமுதளித் தைவரா திகளை 
அகப்படக் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

தரும்அக அமுதால் சத்திசத் தர்களை 
அருளினில் காக்கும் அருட்பெருஞ் ஸோதி 

காலமும் நியதியும் காட்டிஎவ் வுயிரையும் 
ஆலுறக் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

விச்சையை இச்சையை விளைவித் துயிர்களை 
அச்சறக் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

போகமும் களிப்பும் பொருந்துவித் துயிர்களை 
ஆகமுட் காக்கும் அருட்பெருஞ் ஸோதி    
 கலையறி வளித்துக் களிப்பினில் உயிரெலாம் 
அலைவறக் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

விடய நிகழ்ச்சியால் மிகுமுயிர் அனைத்தையும் 
அடைவுறக் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை 
அன்புறக் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

கரணேந் தியத்தால் களிப்புற உயிர்களை 
அரணேர்ந்() தளித்தருள் அருட்பெருஞ் ஸோதி 

() அரணேந்து - சமுக பதிப்பு

எத்தகை எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க் 
கத்தகை அளித்தருள் அருட்பெருஞ் ஸோதி    
 எப்படி எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க் 
கப்படி அளித்தருள் அருட்பெருஞ் ஸோதி 

ஏங்கா துயிர்த்திரள் எங்கெங் கிருந்தன 
ஆங்காங் களித்தருள் அருட்பெருஞ் ஸோதி 

சொல்லுறும் அசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை 
அல்லலில் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

சுத்தமும் அசுத்தமும் தோய்உயிர்க் கிருமையின் 
அத்தகை காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

வாய்ந்திடும் சுத்த வகைஉயிர்க் கொருமையின் 
ஆய்ந்துறக் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி    
 எவைஎலாம் எவையெலாம் ஈண்டின ஈண்டின 
அவைஎலாம் காத்தருள் அருட்பெருஞ் ஸோதி 

அண்டத் துரிசையும் அகிலத் துரிசையும் 
அண்டற அடக்கும் அருட்பெருஞ் ஸோதி 

பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும் 
அண்டற அடக்கும் அருட்பெருஞ் ஸோதி 

உயிருறு மாயையின் உறுவிரி வனைத்தும் 
அயிரற அடக்கும் அருட்பெருஞ் ஸோதி 

உயிர்உறும் இருவினை உறுவிரி வனைத்தும் 
அயர்வற அடக்கும் அருட்பெருஞ் ஸோதி    
 காமப் புடைப்புயிர் கண்தொட ராவகை 
ஆமற அடக்கும் அருட்பெருஞ் ஸோதி 

பொங்குறு வெகுளிப் புடைப்புகள் எல்லாம் 
அங்கற அடக்கும் அருட்பெருஞ் ஸோதி 

மதம்புரை மோகமும் மற்றவும் ஆங்காங் 
கதம்பெற அடக்கும் அருட்பெருஞ் ஸோதி 

வடுவுறும் அசுத்த வாதனை அனைத்தையும் 
அடர்பற() அடக்கும் அருட்பெருஞ் ஸோதி

() அடர்வற à®– முதற்பதிப்பு, பொசு, சமுக 

சுத்தமும் அசுத்தமும் தோய்ந்தவா தனைகளை 
அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஸோதி    
 
 நால்வயிற் றுரிசு நண்ணுயிர் ஆதியில் 
ஆலற அடக்கும் அருட்பெருஞ் ஸோதி 

நால்வயிற் படைப்பும் நால்வயிற் காப்பும் 
ஆலற அடக்கும் அருட்பெருஞ் ஸோதி 

மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில்() 
ஆவிடத் தடக்கும் அருட்பெருஞ் ஸோதி 

() தொழில்களில் - முதற்பதிப்பு, பொசு, பிஇரா 

மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்() 
ஆவிடம் அடக்கும் அருட்பெருஞ் ஸோதி 

() தொழில்களில் - முதற்பதிப்பு, பொசு, பிஇரா 

தத்துவச் சேட்டையுந் தத்துவத் துரிசும் 
அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஸோதி    
 சுத்தமா நிலையில் சூழுறு விரிவை 
அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஸோதி 

கரைவின்மா() மாயைக் கரும்பெருந் திரையால் 
அரைசது() மறைக்கும் அருட்பெருஞ் ஸோதி 

() கரவின்மா, அரசது - முதற்பதிப்பு, பொசு, பிஇரா 

பேருறு நீலப் பெருந்திரை அதனால் 
ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ் ஸோதி 

பச்சைத் திரையால் பரவெளி அதனை 
அச்சுற மறைக்கும் அருட்பெருஞ் ஸோதி 

செம்மைத் திரையால் சித்துறு வெளியை 
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஸோதி    
 பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை 
அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஸோதி 

வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை 
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஸோதி 

கலப்புத் திரையால் கருதனு பவங்களை 
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ் ஸோதி 

விடய நிலைகளை வௌ;வேறு திரைகளால் 
அடர்புற மறைக்கும் அருட்பெருஞ் ஸோதி 

தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால் 
அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ் ஸோதி    
 திரைமறைப் பெல்லாம் தீர்த்தாங் காங்கே 
அரைசுறக் காட்டும் அருட்பெருஞ் ஸோதி 

தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளின் 
ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ் ஸோதி 

சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை 
அத்தகை காட்டும் அருட்பெருஞ் ஸோதி 

எனைத்தா ணவமுதல் எல்லாந் தவிர்த்தே 
அனுக்கிர கம்புரி அருட்பெருஞ் ஸோதி 

விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை 
அடைவுறத் தெருட்டும் அருட்பெருஞ் ஸோதி    
 சொருப மறைப்பெலாம் தொலைப்பித் துயிர்களை 
அருளினில் தெருட்டும் அருட்பெருஞ் ஸோதி 

மறைப்பின் மறந்தன() வருவித் தாங்கே 
அறத்தொடு தெருட்டும் அருட்பெருஞ் ஸோதி

() மறைப்பின் மறைந்தன à®– முதற்பதிப்பு, பொசு
மறப்பின் மறந்தன - சமுக பதிப்பு 

எவ்வகை உயிர்களும் இன்புற ஆங்கே 
அவ்வகை தெருட்டும் அருட்பெருஞ் ஸோதி 

கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம் 
அடையுறத் தெருட்டும் அருட்பெருஞ் ஸோதி 

சத்திகள் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம் 
அத்துறத் தெருட்டும் அருட்பெருஞ் ஸோதி    
 சத்தர்கள் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம் 
அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஸோதி 

படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை 
அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஸோதி 

காக்கும் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை 
ஆக்குறக் காக்கும் அருட்பெருஞ் ஸோதி 

அடக்கும் தலைவர்கள் அளவிலர் தம்மையும் 
அடர்ப்பற வடக்கும் அருட்பெருஞ் ஸோதி 

மறைக்கும் தலைவர்கள் வகைபல கோடியை 
அறத்தொடு மறைக்கும் அருட்பெருஞ் ஸோதி    
 தெருட்டும் தலைவர்கள் சேர்பல கோடியை 
அருட்டிறம் தெருட்டும் அருட்பெருஞ் ஸோதி 

ஐந்தொழி லாதிசெய் ஐவரா திகளை 
ஐந்தொழி லாதிசெய் அருட்பெருஞ் ஸோதி 

இறந்தவர் எல்லாம் எழுந்திட உலகில் 
அறந்தலை அளித்த அருட்பெருஞ் ஸோதி 

செத்தவர் எல்லாம் சிரித்தாங் கெழுதிறல் 
அத்தகை காட்டிய அருட்பெருஞ் ஸோதி 

இறந்தவர் எழுகஎன் றெண்ணியாங் கெழுப்பிட 
அறந்துணை எனக்கருள் அருட்பெருஞ் ஸோதி    
 செத்தவர் எழுகெனச் செப்பியாங் கெழுப்பிட 
அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ் ஸோதி 

சித்தெலாம் வல்ல திறல்அளித் தெனக்கே 
அத்தன்என் றோங்கும் அருட்பெருஞ் ஸோதி 

ஒன்றதி ரண்டது ஒன்றின்இ ரண்டது 
ஒன்றினுள் ஒன்றது ஒன்றெனும் ஒன்றே 

ஒன்றல இரண்டல ஒன்றின்இ ரண்டல 
ஒன்றினுள் ஒன்றல ஒன்றெனும் ஒன்றே 

ஒன்றினில் ஒன்றுள ஒன்றினில் ஒன்றில 
ஒன்றுற ஒன்றிய ஒன்றெனும் ஒன்றே    
 களங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி 
விளங்கஎன் உள்ளே விளங்குமெய்ப் பொருளே 

மூவிரு நிலையின் முடிநடு முடிமேல் 
ஓவற விளங்கும் ஒருமைமெய்ப் பொருளே 

எழுநிலை மிசையே இன்புரு வாகி 
வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே 

நவநிலை மிசையே நடுவுறு நடுவே 
சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே 

ஏகா தசநிலை யாததி னடுவே 
ஏகா தனமிசை இருந்தமெய்ப் பொருளே    
 திரையோ தசநிலை சிவவெளி நடுவே 
வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே 

ஈரெண் நிலைஎன இயம்புமேல் நிலையில் 
பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே 

எல்லா நிலைகளும் இசைந்தாங் காங்கே 
எல்லா மாகி இலங்குமெய்ப் பொருளே 

மனாதிகள் பொருந்தா வானடு வானாய் 
அனாதிஉண் மையதாய் அமர்ந்தமெய்ப் பொருளே 

தானொரு தானாய்த் தானே தானாய் 
ஊனுயிர் விளக்கும் ஒருதனிப் பொருளே    
 அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப் 
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே 

இயல்பினுள் இயல்பாய் இயல்பே இயல்பாய் 
உயலுற விளங்கும் ஒருதனிப் பொருளே 

அருவினுள் அருவாய் அருஅரு அருவாய் 
உருவினுள் விளங்கும் ஒருபரம் பொருளே 

அலகிலாச் சித்தாய் அதுநிலை அதுவாய் 
உலகெலாம் விளங்கும் ஒருதனிப் பொருளே 

பொருளினுள் பொருளாய்ப் பொருளது பொருளாய் 
ஒருமையின் விளங்கும் ஒருதனிப் பொருளே    
 ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கெழு 
கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே 

கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும் 
ஆட்டுற விளங்கும் அருட்பெரும் பொருளே 

அறிவுறு சித்திகள் அனந்தகோ டிகளும் 
பிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே 

வீடுகள் எல்லாம் விதிநெறி விளங்க 
ஆடல்செய் தருளும் அரும்பெரும் பொருளே 

பற்றுகள் எல்லாம் பதிநெறி விளங்க 
உற்றரு ளாடல்செய் ஒருதனிப் பொருளே    
 பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே 
பரத்தினுட் பரமே பரம்பரம் பரமே 

பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே 
பரம்பதம் பரமே பரஞ்சிதம் பரமே 

பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே 
பரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே 

பரங்கொள்சிற் பரமே பரஞ்செய்தற் பரமே 
தரங்கொள்பொற் பரமே தனிப்பெரும் பரமே 

வரம்பரா பரமே வணம்பரா பரமே 
பரம்பரா பரமே பதம்பரா பரமே    
 சத்திய பதமே சத்துவ பதமே 
நித்திய பதமே நிற்குண பதமே 

தத்துவ பதமே தற்பத பதமே 
சித்துறு பதமே சிற்சுக பதமே 

தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே 
அம்பரம் பதமே அருட்பரம் பதமே 

தந்திர பதமே சந்திர பதமே 
மந்திர பதமே மந்தண பதமே 

நவந்தரு பதமே நடந்தரு பதமே 
சிவந்தரு பதமே சிவசிவ பதமே    
 பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே 
பிரமநிற் குணமே பிரமசிற் குணமே 

பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும் 
பரமமே பரம பதந்தரும் சிவமே 

அவனோ டவளாய் அதுவாய் அலவாய் 
நவமா நிலைமிசை நண்ணிய சிவமே 

எம்பொரு ளாகி எமக்கருள் புரியும் 
செம்பொரு ளாகிய சிவமே சிவமே 

ஒருநிலை இதுவே உயர்நிலை எனும்ஒரு 
திருநிலை மேவிய சிவமே சிவமே    
 மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு 
தெய்வப் பதியாம் சிவமே சிவமே 

புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச் 
சிரமுற நாட்டிய சிவமே சிவமே 

கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச் 
செல்வமும் அளித்த சிவமே சிவமே 

அருளமு தெனக்கே அளித்தருள் நெறிவாய்த் 
தெருளுற வளர்க்கும் சிவமே சிவமே 

சத்தெலா மாகியும் தானொரு தானாம் 
சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே   
 எங்கே கருணை இயற்கையின் உள்ளன 
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே 

ஆரே என்னினும் இரங்குகின் றார்க்குச் 
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே 

பொய்ந்நெறி அனைத்தினும் புகுத்தா தெனையருள் 
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே 

கொல்லா நெறியே குருவருள் நெறிஎனப் 
பல்கால் எனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே 

உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக 
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே    
 பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல 
உயிர்த்திரள் ஒன்றென உரைத்தமெய்ச் சிவமே 

உயிருள்யாம் எம்முள் உயிரிவை உணர்ந்தே 
உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே 

இயலருள் ஒளிஓர் ஏகதே சத்தினாம் 
உயிர்ஒளி காண்கஎன் றுரைத்தமெய்ச் சிவமே 

அருளலா தணுவும் அசைந்திடா ததனால் 
அருள்நலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே 

அருளுறின் எல்லாம் ஆகும்ஈ துண்மை 
அருளுற முயல்கஎன் றருளிய சிவமே    
 அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெலாம் 
இருள்நெறி எனஎனக் கியம்பிய சிவமே 

அருள்பெறில் துரும்புஓர் ஐந்தொழில் புரியும் 
தெருள்இது எனவே செப்பிய சிவமே 

அருளறி வொன்றே அறிவுமற் றெல்லாம் 
மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே 

அருட்சுகம் ஒன்றே அரும்பெறல் பெருஞ்சுகம் 
மருட்சுகம் பிறஎன வகுத்தமெய்ச் சிவமே 

அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே 
றிருட்பே றறுக்கும்என் றியம்பிய சிவமே    
 அருட்டனி வல்லபம் அதுவே எலாம்செய் 
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே 

அருளறி யார்தமை அறியார் எம்மையும் 
பொருளறி யார்எனப் புகன்றமெய்ச் சிவமே 

அருள்நிலை ஒன்றே அனைத்தும் பெறுநிலை 
பொருள்நிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே 

அருள்வடி வதுவே அழியாத் தனிவடி 
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே 

அருளே நம்மியல் அருளே நம்உரு 
அருளே நம்வடி வாம்என்ற சிவமே    
 அருளே நம்அடி அருளே நம்முடி 
அருளே நம்நடு வாம்என்ற சிவமே 

அருளே நம்அறி வருளே நம்மனம் 
அருளே நம்குண மாம்என்ற சிவமே 

அருளே நம்பதி அருளே நம்பதம் 
அருளே நம்இட மாம்என்ற சிவமே 

அருளே நம்துணை அருளே நம்தொழில் 
அருளே நம்விருப் பாம்என்ற சிவமே 

அருளே நம்பொருள் அருளே நம்ஒளி 
அருளே நாம்அறி வாய்என்ற சிவமே    
 அருளே நம்குலம் அருளே நம்இனம் 
அருளே நாம்அறி வாய்என்ற சிவமே 

அருளே நம்சுகம் அருளே நம்பெயர் 
அருளே நாம்அறி வாய்என்ற சிவமே 

அருள்ஒளி அடைந்தனை அருள்அமு துண்டனை 
அருண்மதி வாழ்கஎன் றருளிய சிவமே 

அருள்நிலை பெற்றனை அருள்வடி வுற்றனை 
அருளர சியற்றுகென் றருளிய சிவமே 

உள்ளகத் தமர்ந்தென துயிரில் கலந்தருள் 
வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே    
 நிகரிலா இன்ப நிலைநடு வைத்தெனைத் 
தகவொடு காக்கும் தனிச்சிவ பதியே 

சுத்தசன் மார்க்கச் சுகநிலை தனில்எனைச் 
சத்தியன் ஆக்கிய தனிச்சிவ பதியே 

ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருளென் 
கைவரப் புரிந்த கதிசிவ பதியே 

துன்பம் தொலைத்தருட் சோதியால் நிறைந்த 
இன்பம் எனக்கருள் எழிற்சிவ பதியே 

சித்தமும் வாக்கும் செல்லாப் பெருநிலை 
ஒத்துற வேற்றிய ஒருசிவ பதியே    
 கையற வனைத்தும் கடிந்தெனைத் தேற்றி 
வையமேல் வைத்த மாசிவ பதியே 

இன்புறச் சிறியேன் எண்ணுதோ றெண்ணுதோ 
றன்பொடென் கண்ணுறும் அருட்சிவ பதியே 

பிழைஎலாம் பொறுத்தெனுள் பிறங்கிய கருணை 
மழைஎலாம் பொழிந்து வளர்சிவ பதியே 

உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது 
குளத்தினும் நிரம்பிய குருசிவ பதியே 

பரமுடன் அபரம் பகர்நிலை இவையெனத் 
திறமுற() அருளிய திருவருட் குருவே    
 () திரமுற - சாலையில் உள்ள அடிகள் கையெழுத்துப் படி,
சிவாசாரியார் பதிப்பு, பிஇரா பதிப்பு 

மதிநிலை இரவியின் வளர்நிலை அனலின் 
திதிநிலை அனைத்தும் தெரித்தசற் குருவே 

கணநிலை அவற்றின் கருநிலை அனைத்தும் 
குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே 

பதிநிலை பசுநிலை பாச நிலைஎலாம் 
மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே 

பிரம ரகசியம் பேசிஎன் உளத்தே 
தரமுற விளங்கும் சாந்தசற் குருவே 

பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே 
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே    
 சிவரக சியம்எலாம் தெரிவித்()தெனக்கே 
நவநிலை காட்டிய ஞானசற் குருவே 

() தெளிவித் தெனக்கே - சமுக பதிப்பு

சத்தியல் அனைத்தும் சித்தியல் முழுதும் 
அத்தகை தெரித்த அருட்சிவ குருவே 

அறிபவை எல்லாம் அறிவித் தென்னுள்ளே 
பிறிவற விளங்கும் பெரியசற் குருவே 

கேட்பவை எல்லாம் கேட்பித் தென்உளே 
வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே 

 கேட்பித் தெனுள்ளே - சாலைப் படி, சிவாசாரியார், பிஇரா, சமுக

காண்பவை எல்லாம் காட்டுவித் தெனக்கே 
மாண்பதம் அளித்து வயங்குசற் குருவே    
 செய்பவை எல்லாம் செய்வித் தெனக்கே 
உய்பவை அளித்தெனுள் ஓங்குசற் குருவே 

உண்பவை எல்லாம் உண்ணுவித் தென்னுள் 
பண்பினில் விளங்கும் பரமசற் குருவே 

சாகாக் கல்வியின் தரம்எலாம் கற்பித் 
தேகாக் கரப்பொருள் ஈந்தசற் குருவே 

சத்திய மாம்சிவ சித்திகள் அனைத்தையும் 
மெய்த்தகை அளித்தெனுள் விளங்குசற் குருவே 

எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்தெலாம் 
வல்லான் எனஎனை வைத்தசற் குருவே    
 சீருற அருளாம் தேசுற அழியாப் 
பேருற என்னைப் பெற்றநற் றாயே 

பொருந்திய அருட்பெரும் போகமே உறுகெனப் 
பெருந்தய வால்எனைப் பெற்றநற் றாயே 

ஆன்றசன் மார்க்கம் அணிபெற எனைத்தான் 
ஈன்றமு தளித்த இனியநற் றாயே 

பசித்திடு தோறும்என் பால்அணைந் தருளால் 
வசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே 

தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை 
உளந்தெளி வித்த ஒருமைநற் றாயே    
 அருளமு தேமுதல் ஐவகை அமுதமும் 
தெருளுற எனக்கருள் செல்வநற் றாயே 

இயலமு தேமுதல் எழுவகை அமுதமும் 
உயலுற எனக்கருள் உரியநற் றாயே 

நண்புறும் எண்வகை நவவகை அமுதமும் 
பண்புற எனக்கருள் பண்புடைத் தாயே 

மற்றுள அமுத வகைஎலாம் எனக்கே 
உற்றுண வளித்தருள் ஓங்குநற் றாயே 

கலக்கமும் அச்சமும் கடிந்தென துளத்தே 
அலக்கணும் தவிர்த்தருள் அன்புடைத் தாயே    
 துய்ப்பினில் அனைத்தும் சுகம்பெற அளித்தெனக் 
கெய்ப்பெலாந் தவிர்த்த இன்புடைத் தாயே 

சித்திகள் எல்லாம் தெளிந்திட எனக்கே 
சத்தியை அளித்த தயவுடைத் தாயே 

சத்தினி பாதந் தனைஅளித் தெனைமேல் 
வைத்தமு தளித்த மரபுடைத் தாயே 

சத்திசத் தர்கள்எலாஞ் சார்ந்தென தேவல்செய் 
சித்தியை அளித்த தெய்வநற் றாயே 

தன்னிகர் இல்லாத் தலைவனைக் காட்டியே 
என்னைமேல் ஏற்றிய இனியநற் றாயே    
 வெளிப்பட விரும்பிய விளைவெலாம் எனக்கே 
அளித்தளித் தின்புசெய் அன்புடைத் தாயே 

எண்ணகத் தொடுபுறத் தென்னைஎஞ் ஞான்றும் 
கண்எனக் காக்கும் கருணைநற் றாயே 

இன்னருள் அமுதளித் திறவாத் திறல்புரிந் 
தென்னை வளர்த்திடும் இன்புடைத் தாயே 

என்னுடல் என்னுயிர் என்னறி வெல்லாம் 
தன்னஎன் றாக்கிய தயவுடைத் தாயே 

தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திடத் 
தரியா தணைத்த தயவுடைத் தாயே    
 சினமுதல் அனைத்தையுந் தீர்த்தெனை நனவினும் 
கனவினும் பிரியாக் கருணைநற் றாயே 

தூக்கமும் சோம்பும்என் துன்பமும் அச்சமும் 
ஏக்கமும் நீக்கிய என்தனித் தாயே 

துன்பெலாம் தவிர்த்துளே அன்பெலாம் நிரம்ப 
இன்பெலாம் அளித்த என்தனித் தந்தையே 

எல்லா நன்மையும் என்தனக் களித்த 
எல்லாம் வல்லசித் தென்தனித் தந்தையே 

நாயிற் கடையேன் நலம்பெறக் காட்டிய 
தாயிற் பெரிதும் தயவுடைத் தந்தையே    
 அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே 
பிறிவிலா தமர்ந்த பேரருள் தந்தையே 

புன்னிகர் இல்லேன் பொருட்டிவண் அடைந்த 
தன்நிகர் இல்லாத் தனிப்பெருந் தந்தையே 

அகத்தினும் புறத்தினும் அமர்ந்தருட் ஸோதி 
சகத்தினில் எனக்கே தந்தமெய்த் தந்தையே 

இணைஇலாக் களிப்புற் றிருந்திட எனக்கே 
துணைஅடி சென்னியில் சூட்டிய தந்தையே 

ஆதியீ றறியா அருளர சாட்சியில் 
சோதிமா மகுடம் சூட்டிய தந்தையே    
 எட்டிரண் டறிவித் தெனைத்தனி ஏற்றிப் 
பட்டிமண் டபத்தில் பதித்தமெய்த் தந்தையே 

தங்கோல் அளவது தந்தருட் ஸோதிச் 
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே 

தன்பொருள் அனைத்தையும் தன்அர சாட்சியில் 
என்பொருள் ஆக்கிய என்தனித் தந்தையே 

தன்வடி வனைத்தையும் தன்அர சாட்சியில் 
என்வடி வாக்கிய என்தனித் தந்தையே 

தன்சித் தனைத்தையும் தன்சமு கத்தினில் 
என்சித் தாக்கிய என்தனித் தந்தையே    
 தன்வச மாகிய தத்துவம் அனைத்தையும் 
என்வசம் ஆக்கிய என்உயிர்த் தந்தையே 

தன்கையில் பிடித்த தனிஅருட் ஸோதியை 
என்கையில் கொடுத்த என்தனித் தந்தையே 

தன்னையும் தன்னருட் சத்தியின் வடிவையும் 
என்னையும் ஒன்றென இயற்றிய தந்தையே 

தன்இயல் என்இயல் தன்செயல் என்செயல் 
என்ன இயற்றிய என்தனித் தந்தையே 

தன்உரு என்உரு தன்உரை என்உரை 
என்ன இயற்றிய என்தனித் தந்தையே    
 சதுரப் பேரருள் தனிப்பெருந் தலைவன்என் 
றெதிரற் றோங்கிய என்னுடைத் தந்தையே 

மனவாக் கறியா வரைப்பினில் எனக்கே 
இனவாக் கருளிய என்னுயிர்த் தந்தையே 

உணர்ந்துணர்ந் துணரினும் உணராப் பெருநிலை 
அணைந்திட எனக்கே அருளிய தந்தையே 

துரியவாழ் வுடனே சுகபூ ரணம்எனும் 
பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே 

ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த 
பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே    
 எவ்வகைத் திறத்தினும் எய்துதற் கரிதாம் 
அவ்வகை நிலைஎனக் களித்தநல் தந்தையே 

இனிப்பிற வாநெறி எனக்களித் தருளிய 
தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே 

பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச் 
சற்றும்அஞ் சேல்எனத் தாங்கிய துணையே 

தளர்ந்தஅத் தருணம்என் தளர்வெலாம் தவிர்த்துட் 
கிளர்ந்திட எனக்குக் கிடைத்தமெய்த் துணையே 

துறைஇது வழிஇது துணிவிது நீசெயும் 
முறைஇது எனவே மொழிந்தமெய்த் துணையே    
 எங்குறு தீமையும் எனைத்தொட ராவகை 
கங்குலும் பகலும்மெய்க் காவல்செய் துணையே 

வேண்டிய வேண்டிய விருப்பெலாம் எனக்கே 
ஈண்டிருந் தருள்புரி என்னுயிர்த் துணையே 

இகத்தினும் பரத்தினும் எனக்கிடர் சாரா 
தகத்தினும் புறத்தினும் அமர்ந்தமெய்த் துணையே 

அயர்வற எனக்கே அருட்டுணை ஆகிஎன் 
உயிரினும் சிறந்த ஒருமைஎன் நட்பே 

அன்பினில் கலந்தென தறிவினில் பயின்றே 
இன்பினில் அளைந்தஎன் இன்னுயிர் நட்பே    
 நான்புரி வனஎலாம் தான்புரிந் தெனக்கே 
வான்பத மளிக்க வாய்த்தநல் நட்பே 

உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்துகொண் 
டெள்ளுறு நெய்யில்என் உள்ளுறு நட்பே 

செற்றமும் தீமையும் தீர்த்துநான் செய்த 
குற்றமும் குணமாக் கொண்டஎன் நட்பே 

குணங்குறி முதலிய குறித்திடா தெனையே 
அணங்கறக் கலந்த அன்புடை நட்பே 

பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல் 
கணக்கும் தீர்த்தெனைக் கலந்தநல் நட்பே    
 சவலைநெஞ் சகத்தின் தளர்ச்சியும் அச்சமும் 
கவலையும் தவிர்த்தெனைக் கலந்தநல் நட்பே 

களைப்பறிந் தெடுத்துக் கலக்கம் தவிர்த்தெனக் 
கிளைப்பறிந் துதவிய என்உயிர் உறவே 

தன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா 
என்னைத் தழுவிய என்உயிர் உறவே 

மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும் 
எனக்குற வாகிய என்உயிர் உறவே 

துன்னும் அனாதியே சூழ்ந்தெனைப் பிரியா 
தென்உற வாகிய என்உயிர் உறவே    
 என்றும்ஓர் நிலையாய் என்றும்ஓர் இயலாய் 
என்றும்உள் ளதுவாம் என்தனிச் சத்தே 

அனைத்துல கவைகளும் ஆங்காங் குணரினும் 
இனைத்தென அறியா என்தனிச் சத்தே 

பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும் 
இதுஎனற் கரிதாம் என்தனிச் சத்தே 

ஆகம முடிகளும் அவைபுகல் முடிகளும் 
ஏகுதற் கரிதாம் என்தனிச் சத்தே 

சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே 
இத்தகை வழுத்தும் என்தனிச் சத்தே    
 துரியமும் கடந்ததோர் பெரியவான் பொருள்என 
உரைசெய் வேதங்கள் உன்னும்மெய்ச் சத்தே 

அன்றதன் அப்பால் அதன்பரத் ததுதான் 
என்றிட நிறைந்த என்தனிச் சத்தே 

என்றும்உள் ளதுவாய் எங்கும்ஓர் நிறைவாய் 
என்றும் விளங்கிடும் என்தனிச் சித்தே 

சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய் 
இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே 

தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய் 
இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே    
 படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய் 
இடிவற விளங்கிடும் என்தனிச் சித்தே 

மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய் 
ஏற்பட விளக்கிடும் என்தனிச் சித்தே 

உயிர்வகை பலவாய் உடல்வகை பலவாய் 
இயலுற விளக்கிடும் என்தனிச் சித்தே 

அறிவவை பலவாய் அறிவன பலவாய் 
எறிவற விளக்கிடும் என்தனிச் சித்தே 

நினைவவை பலவாய் நினைவன பலவாய் 
இனைவற விளக்கிடும் என்தனிச் சித்தே   
 காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய் 
ஏட்சியின் விளக்கிடும் என்தனிச் சித்தே 

செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய் 
எய்வற விளக்கிடும் என்தனிச் சித்தே 

அண்ட சராசரம் அனைத்தையும் பிறவையும் 
எண்தர விளக்கும் என்தனிச் சித்தே 

எல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட 
எல்லாம் விளக்கிடும் என்தனிச் சித்தே 

ஒன்றதில் ஒன்றென் றுரைக்கவும் படாதாய் 
என்றும்ஓர் படித்தாம் என்தனி இன்பே    
 இதுஅது என்னா இயலுடை அதுவாய் 
எதிர்அற நிறைந்த என்தனி இன்பே 

ஆக்குறும் அவத்தைகள் அனைத்தையும் கடந்துமேல் 
ஏக்கற நிறைந்த என்தனி இன்பே 

அறிவுக் கறிவினில் அதுவது அதுவாய் 
எறிவற் றோங்கிய என்தனி இன்பே 

விடயம் எவற்றினும் மேன்மேல் விளைந்தவை 
இடைஇடை ஓங்கிய என்தனி இன்பே 

இம்மையும் மறுமையும் இயம்பிடும் ஒருமையும் 
எம்மையும் நிரம்பிடும் என்தனி இன்பே    
 முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள் 
எத்திறத் தவர்க்குமாம் என்தனி இன்பே 

எல்லா நிலைகளின் எல்லா உயிர்உறும் 
எல்லா இன்புமாம் என்தனி இன்பே 

கரும்புறு சாறும் கனிந்தமுக் கனியின் 
விரும்புறும் இரதமும் மிக்கதீம் பாலும் 

குணங்கொள்கோற் றேனும் கூட்டிஒன் றாக்கி 
மணங்கொளப் பதஞ்செய் வகையுற இயற்றிய 

உணவெனப் பலகால்() உரைக்கினும் நிகரா 
வணம்உறும் இன்ப மயமே அதுவாய்க்    
 () பல்கால் - சாலைப் படி,சிவாசாரியார், சமுக  
 கலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய் 
நலந்தரு விளக்கமும் நவில்அருந் தண்மையும் 

உள்ளதாய் என்றும் உள்ளதாய் என்னுள் 
உள்ளதாய் என்றன் உயிர்உளம் உடம்புடன் 

எல்லாம் இனிப்ப இயலுறு சுவைஅளித் 
தெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச் 

சாகா வரமும் தனித்தபேர் அறிவும் 
மாகா தலிற்சிவ வல்லப சத்தியும் 

செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும் 
மயக்கறத் தருந்திறல் வண்மைய தாகிப்   
 பூரண வடிவாய்ப் பொங்கிமேல் ததும்பி 
ஆரண முடியுடன் ஆகம முடியும் 

கடந்தென தறிவாம் கனமேல் சபைநடு 
நடந்திகழ் கின்றமெஞ் ஞானஆ ரமுதே 

சத்திய அமுதே தனித்திரு அமுதே 
நித்திய அமுதே நிறைசிவ அமுதே 

சச்சிதா னந்தத் தனிமுதல் அமுதே 
மெய்ச்சிதா காச விளைவருள் அமுதே 

ஆனந்த அமுதே அருளொளி அமுதே 
தானந்த மில்லாத் தத்துவ அமுதே    
 நவநிலை தரும்ஓர் நல்லதெள் ளமுதே 
சிவநிலை தனிலே திரண்டஉள் ளமுதே 

பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே 
கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வான் அமுதே 

அகம்புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம் 
உகந்தநான் கிடத்தும் ஓங்கிய அமுதே 

பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே 
தனிமுத லாய சிதம்பர அமுதே 

உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே 
அலகிலாப் பெருந்திறல் அற்புத அமுதே   
 அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள 
பண்டமும் காட்டிய பரம்பர மணியே 

பிண்டமும் அதில்உறு பிண்டமும் அவற்றுள 
பண்டமும் காட்டிய பராபர மணியே 

நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற 
அனைத்தையும் தரும்ஓர் அரும்பெறல் மணியே 

விண்பதம் அனைத்தும் மேற்பத முழுவதும் 
கண்பெற நடத்தும் ககனமா மணியே 

பார்பதம் அனைத்தும் பகர்அடி முழுவதும் 
சார்புற நடத்தும் சரஒளி மணியே    
 அண்டகோ டிகள்எலாம் அரைக்கணத் தேகிக் 
கண்டுகொண் டிடஒளிர் கலைநிறை மணியே 

சராசர உயிர்தொறும் சாற்றிய பொருள்தொறும் 
விராவியுள் விளங்கும் வித்தக மணியே 

மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும் 
தேவரும் மதிக்கும் சித்திசெய் மணியே 

தாழ்வெலாம் தவிர்த்துச் சகமிசை அழியா 
வாழ்வெனக் களித்த வளர்ஒளி மணியே 

நவமணி முதலிய நலமெலாம் தரும்ஒரு 
சிவமணி எனும்அருட் செல்வமா மணியே    
 வான்பெறற் கரிய வகைஎலாம் விரைந்து 
நான்பெற அளித்த நாதமந் திரமே 

கற்பம் பலபல கழியினும் அழியாப் 
பொற்புற அளித்த புனிதமந் திரமே 

அகரமும் உகரமும் அழியாச் சிகரமும் 
வகரமும் ஆகிய வாய்மைமந் திரமே 

ஐந்தென எட்டென ஆறென நான்கென 
முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே 

வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும் 
ஓதநின் றுலவா தோங்குமந் திரமே    
 உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும்
அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே 

சித்திக்கு மூலமாம் சிவமருந் தெனஉளம் 
தித்திக்கும் ஞானத் திருவருள் மருந்தே 

இறந்தவர் எல்லாம் எழுந்திடப் புரியும் 
சிறந்தவல் லபம்உறு திருவருள் மருந்தே 

மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு 
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே 

நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும் 
உரைதரு பெருஞ்சீர் உடையநல் மருந்தே    
 என்றே என்னினும் இளமையோ டிருக்க 
நன்றே தரும்ஒரு ஞானமா மருந்தே 

மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர் 
நலத்தகை அதுஎன நாட்டிய மருந்தே 

சிற்சபை நடுவே திருநடம் புரியும் 
அற்புத மருந்தெனும் ஆனந்த மருந்தே 

இடையுறப் படாத இயற்கை விளக்கமாய்த் 
தடையொன்றும் இல்லாத் தகவுடை யதுவாய் 

மாற்றிவை என்ன மதித்தளப் பரிதாய் 
ஊற்றமும் வண்ணமும் ஒருங்குடை யதுவாய்க்    
 காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய் 
ஆட்சிக் குரியபன் மாட்சியும் உடைத்தாய் 

கைதவர் கனவினும் காண்டற் கரிதாய்ச் 
செய்தவப் பயனாம் திருவருள் வலத்தால் 

உளம்பெறும் இடம்எலாம் உதவுக எனவே 
வளம்பட வாய்த்த மன்னிய பொன்னே 

புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும் 
வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே 

மும்மையும் தரும்ஒரு செம்மையை உடைத்தாய் 
இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே    
 எடுத்தெடுத் துதவினும் என்றும் குறையா 
தடுத்தடுத் தோங்குமெய் அருளுடைப் பொன்னே 

தளர்ந்திடேல் எடுக்கின் வளர்ந்திடு வேம்எனக் 
கிளர்ந்திட உரைத்துக் கிடைத்தசெம் பொன்னே 

எண்ணிய தோறும் இயற்றுக என்றெனை 
அண்ணிஎன் கரத்தில் அமர்ந்தபைம் பொன்னே 

நீகேள் மறக்கினும் நின்னையாம் விட்டுப் 
போகேம் எனஎனைப் பொருந்திய பொன்னே 

எண்ணிய எண்ணியாங் கெய்திட எனக்குப் 
பண்ணிய தவத்தால் பழுத்தசெம் பொன்னே    
 விண்ணியல் தலைவரும் வியந்திட எனக்குப் 
புண்ணியப் பயனால் பூத்தசெம் பொன்னே 

நால்வகை நெறியினும் நாட்டுக எனவே 
பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே 

எழுவகை நெறியினும் இயற்றுக எனவே 
முழுவகை காட்டி முயங்கிய பொன்னே 

எண்ணிய படிஎலாம் இயற்றுக என்றெனைப் 
புண்ணிய பலத்தால் பொருந்திய நிதியே 

ஊழிதோ றூழி உலப்புறா தோங்கி 
வாழிஎன் றெனக்கு வாய்த்தநல் நிதியே    
 இதமுற() ஊழிதோ றெடுத்தெடுத் துலகோர்க் 
குதவினும் உலவா தோங்குநல் நிதியே 

() இதமுறு - ஆபா 

இருநிதி எழுநிதி இயல்நவ நிதிமுதல் 
திருநிதி எல்லாம் தரும்ஒரு நிதியே 

எவ்வகை நிதிகளும் இந்தமா நிதியிடை 
அவ்வகை கிடைக்கும்என் றருளிய நிதியே 

அற்புதம் விளங்கும் அருட்பெரு நிதியே 
கற்பனை கடந்த கருணைமா நிதியே 

நற்குண நிதியே சற்குண நிதியே 
நிர்க்குண நிதியே சிற்குண நிதியே    
 பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே 
வளம்எலாம் நிறைந்த மாணிக்க மலையே 

மதியுற விளங்கும் மரகத மலையே 
வதிதரு பேரொளி வச்சிர மலையே 

உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே 
துரியமேல் வெளியில் சோதிமா மலையே 

புற்புதந் திரைநுரை புரைமுதல் இலதோர் 
அற்புதக் கடலே அமுதத்தண் கடலே()

() தெண் கடலே à®– முதற்பதிப்பு, பொசு, பிஇரா, சமுக 

இருட்கலை தவிர்த்தொளி எல்லாம் வழங்கிய 
அருட்பெருங் கடலே ஆனந்தக் கடலே    
 பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே 
உவப்புறு வளங்கொண் டோ ங்கிய கரையே 

என்றுயர்ச் சோடைகள் எல்லாம் தவிர்த்துளம் 
நன்றுற விளங்கிய நந்தனக் காவே 

சேற்றுநீர் இன்றிநல் தீஞ்சுவை தரும்ஓர் 
ஊற்றுநீர் நிரம்ப உடையபூந் தடமே 

கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே 
மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே 

களைப்பறக் கிடைத்த கருணைநன் னீரே 
இளைப்பற வாய்த்த இன்சுவை உணவே   
 தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே 
தென்னைவான் பலத்தில்() திருகுதீம் பாலே

() பலத்தின் - சமுக பதிப்பு 

நீர்நசை தவிர்க்கும் நெல்லியங் கனியே 
வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே 

கட்டுமாம் பழமே கதலிவான் பழமே 
இட்டநற் சுவைசெய் இலந்தையங் கனியே 

புனிதவான் தருவில் புதுமையாம் பலமே 
கனிஎலாம் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே 

இதந்தரு() கரும்பில் எடுத்ததீஞ் சாறே 
பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே    
 () ஓர் அன்பர் படியில் மட்டும் ஓ இதம் பெறு ஓ என்றிருக்கிறது - ஆபா

சாலவே இனிக்கும் சர்க்கரைத் திரளே 
ஏலவே நாவுக் கினியகற் கண்டே 

உலப்புறா தினிக்கும் உயர்மலைத் தேனே 
கலப்புறா மதுரம் கனிந்தகோற் றேனே 

நவைஇலா தெனக்கு நண்ணிய நறவே 
சுவைஎலாம் திரட்டிய தூயதீம் பதமே 

பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே 
இதம்பெற உருக்கிய இளம்பசு நெய்யே 

உலர்ந்திடா தென்றும் ஒருபடித் தாகி 
மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே    
 இகந்தரு புவிமுதல் எவ்வுல குயிர்களும் 
உகந்திட மணக்கும் சுகந்தநல் மணமே 

யாழுறும் இசையே இனியஇன் னிசையே 
ஏழுறும் இசையே இயல்அருள் இசையே 

திவள்ஒளிப் பருவம் சேர்ந்தநல் லவளே 
அவளொடும் கூடி அடைந்ததோர் சுகமே 

நாதநல் வரைப்பின் நண்ணிய பாட்டே 
வேதகீ தத்தில் விளைதிருப் பாட்டே 

நன்மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே 
சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே    
 நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே 
எம்பலம் ஆகிய அம்பலப் பாட்டே 

என்மனக் கண்ணே என்அருட் கண்ணே 
என்னிரு கண்ணே என்கணுள் மணியே 

என்பெருங் களிப்பே என்பெரும் பொருளே 
என்பெருந் திறலே என்பெருஞ் செயலே 

என்பெருந் தவமே என்தவப் பலனே 
என்பெருஞ் சுகமே என்பெரும் பேறே 

என்பெரு வாழ்வே என்றன்வாழ் முதலே 
என்பெரு வழக்கே என்பெருங் கணக்கே    
 என்பெரு நலமே என்பெருங் குலமே 
என்பெரு வலமே என்பெரும் புலமே 

என்பெரு வரமே என்பெருந் தரமே 
என்பெரு நெறியே என்பெரு நிலையே 

என்பெருங் குணமே என்பெருங் கருத்தே 
என்பெருந் தயவே என்பெருங் கதியே 

என்பெரும் பதியே என்னுயிர் இயலே 
என்பெரு நிறைவே என்தனி அறிவே 

தோலெலாம் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும் 
மேலெலாம் கட்டவை விட்டுவிட் டியங்கிட   
 என்பெலாம் நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட 
மென்புடைத் தசைஎலாம் மெய்உறத் தளர்ந்திட 

இரத்தம் அனைத்தும்உள் இறுகிடச் சுக்கிலம் 
உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட 

மடல்எலாம் மூளை மலர்ந்திட அமுதம் 
உடல்எலாம் ஊற்றெடுத் தோடி நிரம்பிட 

ஒண்ணுதல் வியர்த்திட ஒளிமுகம் மலர்ந்திடத் 
தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட 

உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக் 
கண்ணில்நீர் பெருகிக் கால்வழிந் தோடிட    
 வாய்துடித் தலறிட வளர்செவித் துளைகளில்() 
கூயிசைப் பொறிஎலாம் கும்மெனக் கொட்டிட

() துணைகளில் - சாலைப் படி,முதற்பதிப்பு, பொசு, சமுக 

மெய்எலாம் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக் 
கைஎலாம் குவிந்திடக் கால்எலாம் சுலவிட 

மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட 
இனம்பெறு சித்தம் இயைந்து களித்திட 

அகங்காரம் ஆங்காங் கதிகரிப் பமைந்திடச் 
சகங்காண உள்ளம் தழைத்து மலர்ந்திட 

அறிவுரு அனைத்தும் ஆனந்த மாயிடப் 
பொறியுறும் ஆன்மதற் போதமும் போயிடத்    
 தத்துவம் அனைத்தும் தாமொருங் கொழிந்திடச் 
சத்துவம் ஒன்றே தனித்துநின் றோங்கிட 

உலகெலாம் விடயம் உளவெலாம் மறைந்திட 
அலகிலா அருளின் ஆசைமேற் பொங்கிட 

என்னுளத் தெழுந்துயிர் எல்லாம் மலர்ந்திட 
என்னுளத் தோங்கிய என்தனி அன்பே 

பொன்னடி கண்டருள் புத்தமு துணவே 
என்னுளத் தெழுந்த என்னுடை அன்பே 

தன்னையே எனக்குத் தந்தருள் ஒளியால் 
என்னைவே தித்த என்தனி அன்பே    
 என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து 
என்னுளே விரிந்த என்னுடை அன்பே 

என்னுளே விளங்கி என்னுளே பழுத்து 
என்னுளே கனிந்த என்னுடை அன்பே 

தன்னுளே நிறைவுறு தரம்எலாம் அளித்தே 
என்னுளே நிறைந்த என்தனி அன்பே 

துன்புள அனைத்தும் தொலைத்தென துருவை 
இன்புறு வாக்கிய என்னுடை அன்பே 

பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டாய் 
என்னுளங் கலந்த என்தனி அன்பே    
 தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி 
என்வசங் கடந்த என்னுடை அன்பே 

தன்னுளே பொங்கிய தண்அமு துணவே 
என்னுளே பொங்கிய என்தனி அன்பே 

அருளொளி விளங்கிட ஆணவம் எனும்ஓர் 
இருளற என்னுளத் தேற்றிய விளக்கே 

துன்புறு தத்துவத் துரிசெலாம் நீக்கிநல் 
இன்புற என்னுளத் தேற்றிய விளக்கே 

மயலற அழியா வாழ்வுமேன் மேலும் 
இயலுற என்னுளத் தேற்றிய விளக்கே    
 இடுவெளி அனைத்தும் இயல்ஒளி விளங்கிட 
நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே 

கருவெளி அனைத்தும் கதிரொளி விளங்கிட 
உருவெளி நடுவே ஒளிதரு() விளக்கே 

() ஒளிர்தரு - சாலைப் படி, சிவாசாரியார் பதிப்பு

தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட 
ஏற்றிய ஞான இயல்ஒளி விளக்கே 

ஆகம முடிமேல் அருள்ஒளி விளங்கிட 
வேகம தறவே விளங்கொளி விளக்கே 

ஆரியர் வழுத்திய அருள்நிலை அனாதி 
காரியம் விளக்கும்ஓர் காரண விளக்கே    
 தண்ணிய அமுதே தந்தென துளத்தே 
புண்ணியம் பலித்த பூரண மதியே 

உய்தர அமுதம் உதவிஎன் உளத்தே 
செய்தவம் பலித்த திருவளர் மதியே 

பதிஎலாம் தழைக்கப் பரம்பெறும்() அமுத 
நிதிஎலாம் அளித்த நிறைதிரு மதியே

() பதம்பெறும் - சாலைப் படி, பொசு, பிஇரா, சமுக 

பால்எனத் தண்கதிர் பரப்பிஎஞ் ஞான்றும் 
மேல்வெளி விளங்க விளங்கிய மதியே 

உயங்கிய உள்ளமும் உயிருந் தழைத்திட 
வயங்கிய கருணை மழைபொழி மழையே    
 என்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப 
மன்னிய கருணை மழைபொழி மழையே 

உளங்கொளும் எனக்கே உவகைமேற் பொங்கி 
வளங்கொளக் கருணை மழைபொழி மழையே 

நலந்தர உடல்உயிர் நல்அறி வெனக்கே 
மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே 

தூய்மையால் எனது துரிசெலாம் நீக்கிநல் 
வாய்மையால் கருணை மழைபொழி மழையே 

வெம்மல இரவது விடிதரு ணந்தனில் 
செம்மையில் உதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே    
 திரைஎலாம் தவிர்த்துச் செவ்விஉற் றாங்கே 
வரைஎலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே 

அலகிலாத் தலைவர்கள் அரசுசெய் தத்துவ 
உலகெலாம் விளங்க ஓங்குசெஞ் சுடரே 

முன்னுறு மலஇருள் முழுவதும் நீக்கியே 
என்னுள வரைமேல் எழுந்தசெஞ் சுடரே 

ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த 
சோதியாய் என்னுளம் சூழ்ந்தமெய்ச் சுடரே 

உள்ஒளி ஓங்கிட உயிர்ஒளி விளங்கிட 
வெள்ஒளி காட்டிய மெய்அருட் கனலே    
 நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை 
வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே 

வேதமும் ஆகம விரிவும் பரம்பர 
நாதமும் கடந்த ஞானமெய்க் கனலே 

எண்ணிய எண்ணிய எல்லாந் தரஎனுள் 
நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே 

வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு 
நலம்எலாம் அளித்த ஞானமெய்க் கனலே 

இரவொடு பகலிலா இயல்பொது நடமிடு 
பரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே    
 வரநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி 
பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே 

சமரச சத்தியச் சபையில் நடம்புரி 
சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே 

சபைஎன துளம்எனத் தான்அமர்ந் தெனக்கே 
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ் ஸோதி 

மருள்எலாம் தவிர்த்து வரம்எலாம் கொடுத்தே 
அருள்அமு தருத்திய அருட்பெருஞ் ஸோதி 

வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர் 
ஆழிஒன் றளித்த அருட்பெருஞ் ஸோதி    
 என்னையும் பொருள்என எண்ணிஎன் உளத்தே 
அன்னையும் அப்பனும் ஆகிவீற் றிருந்து 

உலகியல் சிறிதும் உளம்பிடி யாவகை 
அலகில்பேர் அருளால் அறிவது விளக்கிச் 

சிறுநெறி செல்லாத் திறன்அளித் தழியா 
துறுநெறி உணர்ச்சிதந் தொளிஉறப் புரிந்து 

சாகாக் கல்வியின் தரம்எலாம் உணர்த்திச் 
சாகா வரத்தையுந் தந்துமேன் மேலும் 

அன்பையும் விளைவித் தருட்பேர் ஒளியால் 
இன்பையும் நிறைவித் தென்னையும் நின்னையும்    
 ஓர்உரு ஆக்கியான் உன்னிய படிஎலாம் 
சீர்உறச் செய்துயிர்த் திறம்பெற அழியா 

அருள்அமு தளித்தனை அருள்நிலை ஏற்றினை 
அருள்அறி வளித்தனை அருட்பெருஞ் ஸோதி 

வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர் 
அல்கல்இன் றோங்கிய அருட்பெருஞ் ஸோதி 

உலகுயிர்த் திரள்எலாம் ஒளிநெறி பெற்றிட 
இலகும்ஐந் தொழிலையும் யான்செயத் தந்தனை 

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் 
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஸோதி    
 மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் 
யாவரும் பெற்றிடா இயல்எனக் களித்தனை 

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் 
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஸோதி 

சித்திகள் அனைத்தையும் தெளிவித் தெனக்கே 
சத்திய நிலைதனைத் தயவினில் தந்தனை 

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் 
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஸோதி 

உலகினில் உயிர்களுக் குறும்இடை யூறெலாம் 
விலகநீ அடைந்து விலக்குக மகிழ்க    
 சுத்தசன் மார்க்கச் சுகநிலை பெறுக 
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை 

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர் 
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஸோதி 

அருட்பெருஞ் ஸோதி அருட்பெருஞ் ஸோதி 
அருட்பெருஞ் ஸோதி அருட்பெருஞ் ஸோதி    

திருச்சிற்றம்பலம்


வெண் செந்துறை
பாடல் எண் :4683
அருட்பெருஞ் சோதிஎன் ஆருயி ரில்கலந் தாடுகின்ற 
அருட்பெருஞ் சோதிஎன் அன்பிற் கலந்தறி வாய்விளங்கும் 
அருட்பெருஞ் சோதித்தெள் ளார்அமு தாகிஉள் அண்ணிக்கின்ற 
அருட்பெருஞ் சோதிநின் ஆசைஒன் றேஎன்னுள் ஆர்கின்றதே
பாடல் எண் :4818
அருட்பெருஞ் சோதி அபயம் அபயம் 
பொருட்பெருஞ் சோதிப் புணைதந் - திருட்பெருங்கார் 
அள்ளற் கடல்கடத்தி அக்கரைமேல் ஆனந்தம் 
கொள்ளற் கபயங் கொடு
பாடல் எண் :5323
அருட்பெருஞ் சோதி அபயம் அபயம் 
அருட்பெருஞ் சோதி அபயம் - அருட்பெருஞ் 
சோதி அபயம்சிற் சோதி அபயம்பொற் 
சோதி அபயம் துணை
பாடல் எண் :5399
அருட்பெருஞ் சோதிஎன் அம்மையி னோடறி வானந்தமாம் 
அருட்பெருஞ் சோதிஎன் அப்பன்என் உள்ளத் தமர்ந்தன்பினால் 
அருட்பெருஞ் சோதித்தெள் ளாரமு தம்தந் தழிவற்றதோர் 
அருட்பெருஞ் சோதிச்செங் கோலும் கொடுத்தனன் அற்புதமே   
 கலிவிருத்தம்
பாடல் எண் :5400
அருட்பெருஞ் சோதிஎன் அகத்தில் ஓங்கின 
மருட்பெரும் திரைஎலாம் மடிந்து நீங்கின 
இருட்பெரு மலமுதல் யாவும் தீர்ந்தன 
தெருட்பெரும் சித்திகள் சேர்ந்த என்னையே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.