அருந்தவர் காண்டற் கரும்பெருங்கருணை அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே இருந்தனன் அம்மா நான்செய்த தவந்தான் என்னையோ என்னையோ என்றாள் திருந்துதெள் ளமுதுண் டழிவெலாந் தவிர்த்த திருவுரு அடைந்தனன் ஞான மருந்துமா மணியும் மந்திர நிறைவும் வாய்த்தன வாய்ப்பின்என் றாளே