அருமறையா கமங்கள்முதல் நடுவீ றெல்லாம் அமைந்தமைந்து மற்றவைக்கும் அப்பா லாகிக் கருமறைந்த உயிர்கள்தொறுங் கலந்து மேவிக் கலவாமல் பன்னெறியும் கடந்து ஞானத் திருமணிமன் றகத்தின்ப உருவாய் என்றும் திகழ்கருணை நடம்புரியும் சிவமே மோனப் பெருமலையே பரமஇன்ப நிலையே முக்கட் பெருமானே எத்திறத்தும் பெரிய தேவே