அரும்பாய நகைமடவார்க் காளாய் வாயா அலைக்கின்றேன் அறிவென்ப தறியேன் நின்பால் திருப்பாத பாதகனேன் திருஒன் றில்லேன் திருத்தணிகை மலைக்கேகச் சிந்தை செய்யேன் கரும்பாய வெறுத்துவேம் பருந்தும் பொல்லாக் காக்கைஒத்தேன் சற்றேனும் கனிதல் இல்லா இடும்பாய வன்நெஞ்சக் கள்வ னேன்யான் ஏன்பிறந்தேன் புவிச்சுமையா இருக்கின் றேனே