அரும்பிலே மலர்வுற் றருள்மணம் வீசும் ஆனந்தத் தனிமலர் என்கோ கரும்பிலே எடுத்த சுவைத்திரள் என்கோ கடையனேன் உடையநெஞ் சகமாம் இரும்பிலே பழுத்துப் பேரொளி ததும்பி இலங்கும்ஓர் பசும்பொனே என்கோ துரும்பினேன் பெற்ற பெரும்பதம் என்கோ சோதியுட் சோதிநின் றனையே