அரும்பொரு ளேஎன் அரசேஎன் ஆருயிர்க் காகவந்த பெரும்பொரு ளேஅருட் பேறே சிவானந்தம் பெற்றவர்பால் வரும்பொரு ளேமுக்கண் மாமணி யேநின் வழியருளால் தரும்பொரு ளேபொருள் என்றுவந் தேன்எனைத் தாங்கிக்கொள்ளே