அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியைஎன் அம்மையைஎன் அப்பனைஎன் ஆண்டவனை அமுதைத் தெருளுறும்என் உயிரைஎன்றன் உயிர்க்குயிரை எல்லாம் செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை மருவுபெரு வாழ்வைஎல்லா வாழ்வும்எனக் களித்த வாழ்முதலை மருந்தினைமா மணியைஎன்கண் மணியைக் கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக் கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே