அருளருவி வழிந்துவழிந் தொழுக ஓங்கும் ஆனந்தத் தனிமலையே அமல வேதப் பொருளளவு நிறைந்தவற்றின் மேலும் ஓங்கிப் பொலிகின்ற பரம்பொருளே புரண மாகி இருளறுசிற் பிரகாச மயமாஞ் சுத்த ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே தெருளளவும் உளமுழுதுங் கலந்து கொண்டு தித்திக்குஞ் செழுந்தேனே தேவ தேவே