அருளறி யாச்சிறு தேவருந் தம்மை அடுத்தவர்கட் கிருளறி யாவிளக் கென்றாலும் நெஞ்சம் இரங்குகின்றார் மருளறி யாப்பெருந் தேவேநின் தன்னடி வந்தடுத்தேன் தெருளறி யாச்சிறி யேன்ஆயி னுஞ்செய்க சீரருளே