அருளா ரமுதே என்னுடைய அன்பே என்றன் அறிவேஎன் பொருளாய் அகத்தும் புறத்தும்என்னைப் புணர்ந்த கருணைப் பொருப்பேமெய்த் தெருளாம் ஒளியே வெளியாகச் சிற்றம் பலத்தே நடிக்கின்றோய் இருளா யினஎல் லாம்தவிர்த்தென் எண்ணம் முடிப்பாய் இப்போதே